*பூச்சோங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன்.!* *ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை*

*பூச்சோங்  தமிழ்ப்பள்ளி மாணவர்கள்  பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன்.!*
*ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை*

பூச்சோங், செப்.9- 
        பூச்சோங் 14ஆவது மைல் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறந்த அடைவு நிலையை பெற வேண்டுமென்பதை மனதில் தாங்கி பூச்சோங் 14ஆவது மைலில் வீற்றியிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு பால் குடம் ஏந்தி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

          ஆண்டுதோறும் பள்ளி நிர்வாகம்  மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த விழாவானது இவ்வாண்டு எனது தலைமையில் நடந்தேறியது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒத்துழைப்பு நல்கிய ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,  மாணவர்கள்,  அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பள்ளியின் தலைமையாசிரியர் மதியழகன் கூறினார்.
         ஆசிரியர்கள் தங்களது கடமையை முடித்து விட்டனர். அதனைத்தொடர்ந்து  மாணவர்கள் தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
        நமது பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறந்த அடைவு நிலையை பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், நமக்கு எப்போழுதும் ஆதரவு அளித்து வரும் ஆலய நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் காமராஜ் தெரிவித்தார்.
         பள்ளியின் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களோடு இதர வகுப்பு மாணவர்களும் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு தங்களது பள்ளிக்காக வேண்டிக்
கொண்டனர்.

Comments