இந்தியர், சீனர் சமுதாயத்தின் நிஜமான பின்னணியை சரித்திர நூலில் எழுதுங்கள் அரசாங்கத்திற்கு பினாங்கு இந்து சங்கம் வலியுறுத்து

இந்தியர், சீனர் சமுதாயத்தின் நிஜமான பின்னணியை
சரித்திர நூலில் எழுதுங்கள்
அரசாங்கத்திற்கு பினாங்கு இந்து
சங்கம் வலியுறுத்து

மு.வ.கலைமணி

பினாங்கு, செப் 29-
         ஒரு நாட்டின் முன்னேற்றம் எவ்வளவு முக்கியமோ, அதை விட பல மடங்கு அந்நாட்டின் சரித்திரமும் மிகவும் முக்கியம். அந்த சரித்திரத்தில் நிசமான விடயங்கள் எழுதப்படவில்லை என்றாலோ, அல்லது மறைக்கப்பட்டாலோ எதிர்கால சந்ததியினருக்கு தவறான விடயங்கள் கொண்டுச் சேர்க்கப்படும். ஆகையால், பள்ளிகளில் இருக்கும் சரித்திர நூல்களில் இந்தியர் மற்றும் சீனர் சமுதாயத்தின் நிசமான பின்னணிகள் எழுதப்பட வேண்டும் என்று நேற்று இங்குள்ள கொம்தாரில் நடைபெற்ற நாட்டுப் பற்றை விதைப்போம் என்ற கருத்தரங்கில் பினாங்கு இந்து சங்கத்தின் தலைவர், பி.முருகையா முன் வைத்தார்.


         மலேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இதுவே நாங்கள் முன் வைக்கும் கோரிக்கையாகும். அதாவது, நம் நாடு இந்த வருடம் 61-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் பொருட்டு, சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் இந்திய, சீன சமூகத்தினர் எவ்வாறு வாழ்ந்தனர். அவர்கள் நாட்டிற்கு செய்த பங்களிப்பு அனைத்துமே இன்று கல்வித் திட்டத்தில் இருக்கும் சரித்திர புத்தகங்களில் விடுப்பட்டுள்ளது.
     ். அவ்வாறு விடுப்பட யார் காரணம் என்பது தெரியவில்லை. ஆனால், அதை தெரிந்து கொள்வதை விட, உண்மையான சரித்திரத்தை நூலில் புகுத்த வேண்டும். அந்த நூலில் இந்திய, சீன சமூகத்தின் பங்களிப்பு எழுதப்பட வேண்டும் என்றால் அது தொடர்பாக நன்கு ஆய்வு செய்த குழுவினர் அப்பொறுப்பினை ஏற்க வேண்டும். அதில் பல்லின பிரதிநிதிகள் இடம்பெற்றால் மிகவும் சிறப்பாகும். அதனுட்ன், நிசமான விஷயங்கள் அந்நூலில் இடம்பெறுவதை கல்வியமைச்சு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
       இதனிடையே, பினாங்கு மலாய் சங்கமான (பெமனாங்) தலைவர், டான்ஶ்ரீ டாக்டர் ஹாஜி யூசோலப் லத்திப்,  நிகழ்வினை தொடக்கி வைக்கும் பேசும்போது  மலேசியாவின் சரித்திரம், மேம்பாடு தொடர்பாக சில கருத்துக்களை எடுத்துரைத்தார்.
       அதையடுத்து, முதல் பேச்சாளர், டத்தோ டேனிசன் ஜெயசூரியா (மலேசியா தேசிய பல்கலைகழகம், யூ.கே.எம். பல்லின மக்கள் பற்றிய கல்வி பிரிவு) அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாட்டுப் பற்று, ஒருவர் எவ்வாறு நாட்டிற்கு தியாகம் செய்ய முடியும், செய்துள்ளனர், போர் நிகழ்வும் தருணம் என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் விவரித்தார்.
       மேலும், பேசிய டத்தோ ஜெயசூரியா, வருகையாளர் முன் ஆட்சியாளர்கள் பிடியில் மலேசியா, ஜப்பான் ஆட்சி, சுதந்திரத்திற்கு முன் மலேசியாவின் நிலை, சுதந்திரத்திற்கு பின் மலேசியாவின் சூழ்நிலை என பல அம்சங்களை எடுத்துரைத்தார்.
      தொடர்ந்து, புதிய மலேசியா உருவாக்கும் முயற்சியில் நம்முடைய எதிர்பார்ப்புகள், கனவுகள், மலேசியாவிற்கு புதிய சரித்திரம் படைக்க, மலேசியர்களின் கனவை மெய்பிக்க, நாம் செய்ய வேண்டியதை விளக்கினார்.
சட்ட ரீதியாக ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு முன்னுரிமை இருப்பது, இதர சமூகத்தினரின் சம உரிமையை பாதிக்கலாம். அதனுடன், நல்ல அரசு, பல்லின மக்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு, மனித உரிமை என பல அம்சங்களும் பேசப்பட்டன.
அடுத்து பேச்சாளர், ஹாஜி யூசோப் அஸ்மி மெரிக்கன், அன்றைய காலக்கட்டத்தில் ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் மலேசியா, பினாங்கு பிரி ஸ்கூல், அன்று பயன்படுத்தப்பட்ட பொருட்கள் என பழைய சூழ்நிலையை படம் போட்டு காட்டும் வகையில் பேசினார்.
       பின்னர், 3-ஆவது பேச்சாளர் ஜானகி இராமன் பேசுகையில், இந்தியர்களின் பாதிப்பு, அந்நியர்களின் பிடியில் மலாயா இருக்க, இந்தியர்கள் பட்ட துன்பம், குறைவான சம்பளத்தில் அள்ளல் பட்ட இந்தியர்கள், அவர்களின் ஏழ்மை நிலை, வாக்குறுதிகள் நம்பி ஏமாந்தவர்கள், இந்தியர்களின் பங்களிப்பு மறக்கப்பட்டது என பல சரித்திர விஷயங்களை கூறினார்.
       இந்நிகழ்வில் இறுதியில், நடுவர், டாக்டர் பாலசுப்ரமணியம், கருத்தரங்கினை மிக அழகாக வழிநடத்த, வருகையாளர்களும் கேள்விகளை எடுத்துரைத்தனர். அனைத்து கேள்விகளுக்கும் பேச்சாளர்கள் தெளிவான பதிலை வழங்கினர்.
அதை தவிர்த்து, நிகழ்வில் முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மக்களில்
பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்நிகழ்வு ஒரு பயன்மிக்க நிகழ்வாக அமைந்தது குறித்து பி.முருகையா மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் தொடர்புக்கு,
P.Murugiah
President
Peanang Hindu Association.

Comments