முன்னறிவிப்பு ஏதும் இல்லாது பத்து கவான் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டது! மக்கள் கொதிப்பு!

முன்னறிவிப்பு ஏதும் இல்லாது பத்து கவான் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டது!
மக்கள் கொதிப்பு!

மு.வ கலைமணி

பத்து கவான், செப். 29- 
           நீதிமன்ற ஆணையர் உட்பட,  பந்துவான் போலீஸ், பிடிஆர்எம் போலீஸ்,  அந்நிய தொழிலாளர்கள் உட்பட நூற்றுக் கணக்காகானவர்கள் துணைக் கொண்டு
ஆளில்லாத வீடுகளை அத்துமீறி
வீட்டுக் கதவுகளை எட்டி உதைத்து
உள்ளே நுழைந்து பொருட்களை வெளியேற்றி வீடுகளை உடைத்தனர் நொறுக்கினர்.
         ஹேக்கோ வெல்ட் வீடமைப்பு நிறுவனம்
முன்னர்,  2017இல் தோட்டத் தொழிலாளர்கள் மீது சட்டவிரோத குடியேறிகள் என குற்றஞ்சாட்டி
பினாங்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அவ்வவழக்கில் தோல்வி கண்ட குடியிருப்பார்கள், தீர்ப்பை எதிர்த்து  கோலாலம்பூர் அப்பீல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
       ஹேக்கோ வெல்ட் அவ்வழக்கை
திரும்ப பெற்றுக் கொண்டிட கேட்டுக் கொண்டதை தொழிலாளர் தரப்பு ஒப்புக்கொண்டது.
ஒரு புதிய அத்தியாயமாக,
18/08/2018இல் சுமூகமான முறையில்
14 - தோட்ட குடியிருப்புக்களது
நிலையை இருதரப்பு வழக்கறிஞர்கள்
பேசி தீர்வுக்கண்டு ,
எதிர்வரும் 30/11/2018-வரையில் தொழிலாளர்கள் குடியிருக்க
அனுமதி தந்திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
இருதரப்பும் ஒப்புக் கொண்டு
அதன்படி 2008-ல் வீடொன்றுக்கு
இழப்பீட்டு நிதியாக அன்றைய
அபாட் நலூரி வீடமைப்பு நிறுவனம் 
வீடொன்றுக்கு 20 ஆயிரம் வெள்ளி இழப்பீடு
என்ற சேவா பெலி திட்ட நடைமுறையில்
மலிவு விலை வீடான 42 ஆயிரம் மதிப்பிலான வீடும்,
இன்றைய புதிய நிறுவனம் ஹேக்கோ
வெல்ட் வீடமைப்பு நிறுவனம்
இழப்பீடாக  10 ஆயிரம் வெள்ளி வீடும் ஆக மொத்தம்
40 ஆயிரம்  வெள்ளி வழங்கிட முடிவானது.
அதே நேரத்தில் பத்து கவான் தோட்டத்து மாரியம்மன்  கோவிலையும் உடைத்திட அனுமதியும் கேட்டனர் .
அதனை  ஏற்றுக்கொள்ள  மறுத்து நீதிமன்றம் சென்றதால், பழிவாங்கும் படலமே இது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதுவாக தோட்டப் பாட்டாளிகளை நசுக்கும் முதலாளித்துவத்தை
வன்மையாக கண்டிக்கின்றோம்,
அதன்படி பத்து கவானில் நடந்திட்ட இவ்வாரான ஆதிக்க கொடுமையை அடாவடிதனத்தை எதிர்த்து மீண்டும் வழக்காட நீதிமன்றம் செல்கின்றோம் என ஆலய அறங்காவலர்
முவீ.மதியழகன் தெரிவித்தார்.

Comments