மலேசியாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் கலைவிழா! ராம்குமார், கும்கி விக்ரம் பிரபு பங்கேற்பு! அக்டோபர் 19,20 இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெறும்! தலைவர் இயக்குநர் விஜயசிங்கம் தகவல்

மலேசியாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் கலைவிழா!
ராம்குமார், கும்கி விக்ரம் பிரபு பங்கேற்பு!
அக்டோபர் 19,20 இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெறும்!
தலைவர் இயக்குநர் விஜயசிங்கம் தகவல் 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.10-
         மலேசிய சிவாஜி கணேசன் கலைமன்றத்தின் ஏற்பாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோலாலம்பூரில. இரண்டு நாட்கள் கோலாகல  கலைவிழா நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் ஐயா விஜயசிங்கம் கூறினார்.


          இந்த மாபெரும் கலைவிழா அக்டோபர் 19ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் நடைபெறும். இந்த விழாவில் நடிகர் விக்ரம் பிரபு, ராம்குமார் ஆகியோர் கலந்து கொள்ளவிருப்பதாக
ஐயா விஜயசிங்கம் தெரிவித்தார்.
            இந்த கலைநிகழ்ச்சியில் ஆடல், பாடல், விக்ரம் பிரபு, ராம்குமார், சொற்பொழிவு என்று பல நிகழ்வுகள் நடைபெறும். அதேநேரத்தில் இந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழாவையொட்டி அக்டோபர் 20 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு கோலாலம்பூர் சன்வே புத்ரா தங்கு விடுதியில் சிறப்பு விருந்தோம்பல் நிகழ்வும் நடைபெறவிருப்பதாகவும் விஜயசிங்கம் சொன்னார்.
          இந்த சிறப்பு விருந்து நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட சிவாஜி கணேசன் திரைப்படங்கள் குறித்து பாண்டிதுரை சொற்பொழிவாற்றுவார். மலேசிய சிவாஜி போல் சில கலைஞர்கள் பாடலுக்கு அபிநயம் பிடிப்பார்கள். இந்த நிகழ்வில் விக்ரம் பிரபு, ராம்குமார் உரையாற்றுவார்கள். இதில் மலேசிய மூத்த கலைஞர்கள் இருவருக்கும் வளர்ந்து வரும் கலைஞர்கள் இருவருக்கும் சிவாஜி கணேசன் விருதுகள் வழங்கப்படும் என்று விஜயசிங்கம் சொன்னார்.   
         மலேசியாவில் சிவாஜி கணேசன் கலைமன்றத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் சிவாஜி கணேசன் அவர்களை நினைவுகூறும் வகையில் சிறப்பு இலவச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில்  செலவீனம் காரணமாக அக்டோபர் 19ஆம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கான கட்டணமாக  30 வெள்ளி வசூலிக்கப்படுகிறது. இந்த 30 வெள்ளிக்கான அழைப்பு அட்டைகளை வாங்கி ஆதரவு வழங்கும்படி ஐயா விஜயசிங்கம் கேட்டுக் கொண்டார்.
           இந்த சிவாஜி கணேசன் கலைவிழா நிகழ்வுக்கு யுனிசன் புரொடக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரன் ஆதரவில் நடைபெறவிருக்கிறது. அதேநேரத்தில் மறுநாள் அக்டோபர் 20 சனிக்கிழமை சன்வே புத்ரா தங்கு விடுதியில்  நடைபெறும் சிறப்பு விருந்தோம்பல் நிகழ்வுக்கான விருந்து மேசைகளை ஒரு நபருக்கு 150 வெள்ளி மற்றும் 200 வெள்ளிக்கு  வாங்கி ஆதரவு தரும்படி விஜயசிங்கம் கேட்டுக் கொண்டார்.
             நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் அவதாரமாக இருந்து இன்றளவும் நமது நினைவில் வாழ்ந்து வருகிறார். தன் நடிப்பால், பாவனையால், நடையால் நடிப்பின் இமயம் என்று உயிர்ப்பெற்று மறைந்த போதும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  பிறந்த நாள் விழாவையொட்டி மலேசியாவில் ஆண்டுதோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் 19ஆம் நாள்  நடத்தப்படும் கலைநிகழ்ச்சிக்கான 30 வெள்ளி அழைப்பு அட்டைகளையும் அக்டோபர் 20ஆம் நாள் நடைபெறும் சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கான  விருந்து மேசைகளையும் வாங்கி ஆதரவு தரும்படி ஐயா விஐயசிங்கம் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு - திரு.விஜயசிங்கம்- 012-327 8081,  ராஜசேகரன்-012-288 1515, ஞான சைமன்-019-224 9544

Comments