51 வருடங்களாக பிரிந்திருந்த சகோதரிகளை இணைத்த ராகாவின் "உறவுகளின் சங்கமம்

51 வருடங்களாக பிரிந்திருந்த சகோதரிகளை இணைத்த ராகாவின் "உறவுகளின் சங்கமம்"

கோலாலம்பூர், அக்.17-   
         ஏதோ ஒரு காரணங்களால் நம்முடைய உறவுகளை விட்டு பிரியும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம். அந்த உறவுகளைத் தேடி மீண்டும் சேர வேண்டும் என்ற தருணத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம். இருப்பினும், ஒரு சில உறவுகளை கண்டுபிடிக்க பல வழிகளில் முயன்றும் அந்த முயற்சி எந்தவொரு பலனுமில்லாமல் போய்விடுகிறது.
           பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் நோக்கில் ராகாவில் உறவுகளின் சங்கமம் எனும் அங்கம் அறிமுகப்படுத்தப்பட்ட.இந்நிகழ்ச்சியின் வாயிலாக ராகா எத்தணையோ குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்த்து வைத்துள்ளது. அவ்வகையில், அண்மையில், அறிவிப்பாளர் சுரேஷ் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் 51 வருடங்களாக பிரிந்திருந்த 3 சகோதரிகளை ஒன்றிணைத்துள்ளது.
       இந்த மகிழ்ச்சியான தகவலை அக்குடும்பத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய சமூகவளத்தின் வாயிலாக பதிவேற்றம் செய்திருந்தார். அதுமட்டுமின்றி, உறவுகளின் சங்கமம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் சுரேஷ் மற்றும் ராகாவிற்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Comments