ரவாங் ஐயப்பன் சேவை சங்கத்தின் மக்கள் சேவை தொடரும்! 6ஆவது ரத்ததான நிகழ்வில் நடராஜர் குருசாமி தகவல்

ரவாங் ஐயப்பன் சேவை சங்கத்தின் மக்கள் சேவை தொடரும்!
6ஆவது ரத்ததான நிகழ்வில் நடராஜர் குருசாமி தகவல்

குணாளன் மணியம்

ரவாங், அக்.10-
          ரவாங் ஐயப்பன் சேவை சங்கத்தின் மக்கள் சேவை தொடரும் என்று அதன் தலைவர் நடராஜர் குருசாமி கூறினார்.


           மக்கள் சேவையை முன்வைத்து சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ரத்ததான நிகழ்வை ஆறாவது ஆண்டாக நடத்துகிறோம். இது தங்குதடையின்றி ஆண்டுதோறும் தொடரும் என்று தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய செய்தியில் நடராஜர் குருசாமி தெரிவித்தார்.
          நாங்கள் ரத்ததான நிகழ்வை மட்டுமன்றி அன்னதானம், சமய வழிபாடுகள் உள்ளிட்ட பல சேவைகளையும் மேற்கொண்டு வருகிறோம். ஆண்டுதோறும் இருமுடி கட்டி ஐயப்பனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றி வருகிறோம். இதன்வழி இளைஞர்கள் மட்டுமன்றி பலரும்  பலனடைகிறார்கள் என்று நடராஜர் குருசாமி குறிப்பிட்டார்.

         இந்த ரத்ததான நிகழ்வில் ரவாங் வட்டாரத்தைச் சேர்ந்த பலர் ரத்ததானம் வழங்கினர். இதில் நிரிழிவு, கண், பல் பரிசோதனைகள் நடந்தன. இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய டத்தோ கிருஷ்ணமூர்த்தி, கேப்டன் குணா, கராத்தே ஆறுமுகம், திரு.பாலா, மருத்துவர்கள், தேசம் குணாளன் மணியம் ஆகியோருக்கு பொன்னாடை, மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

Comments