8 சாதனையாளர்களைக் கெளரப்படுத்திய ‘ஆஸ்ட்ரோ உறுதுணை’ ‘ஆஸ்ட்ரோ உலகம்’ விருது

8 சாதனையாளர்களைக் கெளரப்படுத்திய ‘ஆஸ்ட்ரோ உறுதுணை’  ‘ஆஸ்ட்ரோ உலகம்’ விருது

கிள்ளாள், அக்.8-
       நமது சமுதாயத்திற்கும் நற்பணியாற்றி வரும் நல்லுள்ளங்களையும், சமுதாய வளர்ச்சிக்கு பங்காற்றிவரும் சாதனையாளர்களையும் கெளரவப்படுத்தும் வகையில், ஆஸ்ட்ரோவின் மாபெரும் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் ‘ஆஸ்ட்ரோ உறுதுணை’ மற்றும் ‘ஆஸ்ட்ரோ உலகம்” விருது’ இடம்பெற்றது.
       கல்வி, சமூகம், புத்தாக்கம் என்று பல துறைகளில் சாதனைக்கொடி நாட்டி, சமூக மேம்பாட்டிற்கு நற்பணி சேவைகளை ஆற்றிவரும் 8 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அவ்வகையில் தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் முகம்மது ரஹிம் கமாலுடின், சமூக தொழில் முனைவோரும் சமூக ஆர்வலரும் ஆசிரியர் ராஜ் ரித்வான் சிங், தொலைக்காட்சி அறிவிப்பாளரும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நற்பணி ஆற்றி வரும் குமேரஷ், சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கலைவதற்கான புதிய தீர்வுகளை உருவாக்கிய 20 வயது பொறியியல் மாணவர் சிவா நாகப்பன் மற்றும் இளைஞர்களுக்காக பயன் தரும் பல அரிய திட்டங்களை வழங்கி வரும் அந்தோணி டேவிட் ஆகியோர் ‘ஆஸ்ட்ரோ உறுதுணை’ விருதைப் பெற்றார்கள்.
'ஆஸ்ட்ரோ உலகம்’ விருதை மலேசியாவின் மைக்ரோசாப்ட் நிர்வாக இயக்குனர் கே. ராமன், தகவல் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை புரிந்து வரும் டாக்டர் தினகாரன் பெருமாள் மற்றும் MDEC டிஜிட்டல் தொழில் முனைவு பிரிவின் துணைத் தலைவர் சுமித்ரா நாயர் பெற்றார்கள்.
அக்டோபர் 6-ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து மற்றும் மலேசியாவிற்கான இந்தியத் தூதர் ஸ்ரீ மிருதுல் குமார் விருதுகளை எடுத்து வழங்கினார்.
இவர்களின் உழைப்பு உன்னதமானது, ஆராய்ச்சி ஆக்கப்பூர்வமானது, சேவை அளப்பறியது, சாதனைகள் காலத்தால் மறையாதது. தன்னிலை உயர்த்திக் கொண்டு சமுதாயத்தையும் உயர்த்திய இவர்கள் நம் நம் நாட்டின் நட்சத்திர சாதனையாளராவர். இவர்களின் சாதனை அடுத்துவரும் இளம் தலைமுறையினர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்று நம்புவோம்!

Comments