நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 90 ஆவது பிறந்தநாள் கலைவிழா! பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் அக்டோபர் 19இல் இலவசமாக நடைபெறுகிறது! நடிகர் விக்ரம் பி்ரபு, ராம்குமாருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்! தலைவர் விஜய சிங்கம் தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
90 ஆவது பிறந்தநாள் கலைவிழா! 
பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டரில் அக்டோபர் 19இல் இலவசமாக நடைபெறுகிறது!
நடிகர் விக்ரம் பி்ரபு, ராம்குமாருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்!
தலைவர் விஜய சிங்கம் தகவல்

கோலாலம்பூர், அக்.16- 
           மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் நடிகர் திலகத்தின் 90ஆவது பிறந்த நாள கலை விழா எதிர்வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30க்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் இலவசமாக நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் இயக்குநர் விஜயசிங்கம் கூறினார்.

         இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும் பொது மக்கள், மன்றத்தின் வளர்ச்சி நிதிக்காக தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கலாம்.

நடிப்புலகில் ஓர் அவதாரமாகத் தோன்றி நடிப்புக் கலைக்கே ஓர் இலக்கணமாகவும் வாழ்ந்து இன்றும் நம் நினைவில் நிலைத்திருக்கிறார் நடிகர் திலகம். கலைஞர்களுக்கெல்லாம் அரசராக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விழாவை இம்மன்றம் சிறப்பாக நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே அவரது உயிரோடும் உணர்வோடும் கலந்ததுதான் அவரின் நாடகக் கலை. சினிமாவும் நாடகமும் அவருக்கு இரு கண்கள் போன்றது. நடிகர் திலகம் அவர்கள் நடித்த சில படங்களைத் தேர்ந்தெடுத்து  அவர்தான் உலக மகா நடிகர் என்பதை திரு பாண்டித்துரை   நிகழ்ச்சியில் உரையாற்றி சிறப்புச் சேர்ப்பார்.
           நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற தமிழகத்தின் சிறந்த பேச்சாளரும்
ஆய்வாளருமான முனைவர் திரு.மருது மோகன் அவர்களின் உரை நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டும்.
மேலும் சிறப்பு அங்கமாக, ஆண்டு தோறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது வழங்கி நம் நாட்டு கலைஞர்களைச் சிறப்பிப்பது போல் இவ்வாண்டும் மூத்தக் கலைஞர் மூவருக்கும் வளரும் கலைஞர்  ஒருவருக்கும் விருதும் பணமுடிப்பும் வழங்கி சிறப்பு சேர்க்கப்படும்.
சிவாஜி கணேசன் அவர்களின் அபிமானம் கொண்ட நம் நாட்டு கலைஞ்கர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாராட்டும் சிறப்பும் செய்யப்படும். பாராட்டுப் பெறும் கலைஞர்கள் மேடையில் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவார்கள்.
முன்னனிப் பாடகர்களான சிவகாந்தன், பாபுலோகநாதன், மேகநாதன், பிரிட்டோ, அந்தோணி, ஷார்மிளா சிவகுரு, புவனேஸ்வரி, ஹேமா ஆகியோர் தங்களின் இனிமையான குரலில் பாடி மகிழ்விப்பர்.
எதிர்வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30க்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் இந்நிகழ்ச்சி இலவசமாக நடைபெறும்.
          இந்நிலையில் மறுநாள் 20ஆம் தேதி சனிக்கிழமை சன்வே புத்ரா விடுதியில் நடைபெறும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய விருந்துக்கு மேசைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விருந்து மேசைகளை வாங்கி ஆதரவு தரும்படி  விஜயசிங்கம் கேட்டுக் கொண்டார்.
          இந்த இரண்டு பெரிய நிகழ்ச்சிகளிலும் தயாரிப்பாளர்  திரு.ராம் குமார் அவர்களும் கும்கி புகழ் நடிகர் திரு. விக்ரம் பிரபு அவர்களும் கலந்து நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்ப்பர். நடிகர்திலகன் சிவாஜி கணேசன் ரசிகர்கள், பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுடன் ரசிகர்கள் அனைவரும் திரு.ராம் குமார் மற்றும் நடிகர் திரு.விக்ரம் பிரபு ஆகிய இருவருடன் புகைபபடம் எடுத்துக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் அதற்கான நேரம் ஒதுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ரசிக்கத்தக்க சுவையான பல வித அங்கங்களுடன் நடைபெறும் இந்த மாபெரும் கலை விழாவை கண்டு மகிழ நடிகர் திலகத்தின் ரசிகர்களும் ஆர்வலர்களும் கலைஞர்களும் திரளாக வருகை தரும்படி மன்றத்தின் தலைவர் இயக்குனர் விஜயசிங்கம் கந்தசாமி கேட்டுக் கொள்கிறார்.
           இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தலைவர் திரு.    விஜயசிங்கம்-012 3728081, ஒருங்கிணைப்பாளர் திரு. இராஜசேகரன்-012 2881515 அல்லது பொருளாளர் திரு.ஞான சைமன் 019 2249844 ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம்.

Comments