மறக்கப்பட்ட சாதனையாளர்களை கொண்டாட டிஜியுடன் கரம் கோர்க்கிறது ராகா

மறக்கப்பட்ட சாதனையாளர்களை கொண்டாட டிஜியுடன்  கரம் கோர்க்கிறது ராகா

கோலாலம்பூர், அக்.2-   
         ஒருவர் எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி செய்கின்ற உதவிகள் ஒருவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு சேர்கின்றது.இருப்பினும், இவர்களின் நல்ல செயல்கள் தற்போது கவனிக்கப்படாமல் போய்விடுகின்றது.

இவ்வகையான சாதனையாளர்களைக் கொண்டாடும் வகையில் தகவல் தொலைத் தொடர்பு நிறுவமான டிஜியுடன் இணைந்து ராகா ஒரு ஆண்டு காலத்திற்கு ‘சாதனை ஹீரோக்கள்’ எனும் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.   
          இப்பிரச்சாரத்தின் வாயிலாக மற்றவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கிய மலேசிய ஹீரோக்களின் தன்னலமற்ற செயல்களை அங்கீகரிக்கப்படவுள்ளது.  இன்றைய நவீன எத்தனையோ சாதனையாளர்களின் செயல்கள் இலைமறைக் காயாக உள்ளது. இவர்களின் சாதனைகள் ராகாவில் இடம்பெற வேண்டுமென்றால் ரசிகர்கள் ராகாவின் www.raaga.my அதிகாரப்பூர்வ அகப்பக்கத்திற்கு சென்று அடுத்த ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்கலாம். சிறந்த ஊக்கமூட்டும் சாதனையாளர்களைத் தேர்தெடுக்கப்பட்டு அவர்களை கலக்கல் காலை நிகழ்ச்சியில் அறிவிப்பாளர் ஆனந்தா மற்றும் உதயா நேர்காணல் செய்வார்கள். இது குறித்து ராகாவின் தலைவர் சுப்ரமணியம் வீராசாமி கூறுகையில், “நம்முடைய அன்றாட வாழ்வில் தன்னலமற்ற மலேசியர்களின் செயல்கள் உண்மையிலேயே வியக்க செய்ய வைக்கின்றது. தங்களுடைய வாழ்க்கையில் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் தேவைப்படும் மக்களுக்கு உதவிகளைச் செய்து தங்களுடைய வாழ்க்கை அர்ப்பணிக்கின்றார்கள். ஆகவே, ராகாவில் இவர்களின் கதைகள் ஒலிபரப்புவதின் வாயிலாக மக்கள் நல்ல விஷயங்களைச் செய்ய ஊக்குவிக்கின்றது. டிஜியுடனான இந்தக் கூட்டு முயற்சி, எங்களின் பல்வேறு தளங்களின் மூலம் ராகாவின் 1.29 மில்லியன் ரசிகர்களிடம் பல ஊக்கமூட்டும் கதைகளைக் கொண்டு சேர்க்க முடியும் என்று நம்புகிறோம்”, என்றார்.
         டிஜியின் செயல்படுத்துதல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரிவின் தலைவர், ராஜேஸ்வரன் வெங்கடசலம், கூறுகையில், “வேலையில் மட்டுமின்றி, நம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உத்வேகம் தரும் ஊக்கத்தை தருவதை ஊக்குவிக்கிறோம். அவ்வகையில், ராகாவுடன் இணைந்து எந்தவொரு எதிர்பார்ப்புமின்ற உதவு செய்யும் நபர்களைக் கண்டறியும் நோக்கியில் நாங்கள் இந்த ‘சாதனை ஹீரோக்கள்’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். இப்பிரச்சாரத்தின் வாயிலாக பல சாதனை கதைகள் நம்முடைய மலேசியர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி சமுதாயத்தின் மத்தியில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கிறோம்”.
இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த ‘சாதனை ஹீரோக்கள்’ வாயிலாக சுமார் 7 சாதனையாளர்கள் ராகாவின் கலக்கல் காலை நிகழ்ச்சியில் நேர்காணல் செய்துள்ளோம்.
அவ்வகையில், அடிப்படை மருத்துவ வசதிகளைப் பெற முடியாதவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் ‘தெடி  பீயர்' டாக்டர் மதுசுதன், ஹையனவில் டைபூன் பேரிடாரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பு இல்லங்களுக்கு இலவசமாக பொருட்களை அனுப்பி வைத்துள்ள எவரெஸ்ட் நிறுவனத்தின் தோற்றுனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ ஆண்டி, மலேசிய யோகா சங்கத்தின் தோற்றுனர் மாஸ்டர் மணிசேகரன் யோகா பட்டறைகள் மற்றும் பண வசதியில்லாத குழந்தைகளுக்கு இலவச வகுப்புகளை நடத்தி வருகின்றார்.
        இவர்களுடன் மறுசுழற்சி பணிகளில் ஏற்பட்டு அவற்றில் கிடைக்கும் வருமானத்தை புற்றுநோயில் பதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் ஷாலினி, உடல் இயலாமை இதற்கும் தடையில்லை என்று சொல்லும் ஜேக்கப் ஐசக் தன்னுடைய வருமானத்திலிருந்து ஒரு தொகையைக் குறிப்பிட தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கி வருகின்றார். இவர்களைத் தவிர்த்து, விபத்தில் கண் பார்வையை இழந்து தற்போது reflexology உரிமையாளராக பார்வையற்றவர்கள் இலவசமாக சமூக சேவைகளை செய்யும், மகேந்திரன் மற்றும் கொடுமையில் பாதிக்கப்பட்ட விலங்குகளை மீட்டு எடுக்கும் முயற்சியில் புஷ்ப ராணி Malaysia Independent Animal Rescue (MIAR) எனும் அரசாங்க சார்பாற்ற அமைப்பு ஒன்று நடத்தி வருகின்றார்.
'சாதனை ஹீரோக்கள்’ குறித்த மேல் விவரங்களுக்கு www.raaga.my அகப்பக்கத்தை வலம் வரலாம்.

Comments