சத்தான பயிர்கள் விளைய, விதைகள் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டும்! பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்

சத்தான பயிர்கள் விளைய, விதைகள் கவனமாக  பாதுகாக்கப்பட வேண்டும்!
பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள் 

மு.வ.கலைமணி

பினாங்கு, அக்.10-
           பாதுகாக்கப்பட்ட விதைகள் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும்.
மிகப்பெரிய வல்லரசு நிறுவனங்கள் , உணவு மற்றும் விதைகள் உற்பத்தியை தங்களது வசம் வைத்துக் கொண்டு தரமான விவசாயத்தை அழித்துக்கொண்டு வருவதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகமது இத்திரிஸ்  கூறினார்.
        இதன் காரணமாக இரசாயன சேர்க்கப்பட்ட விதைகள் பரவலாக விவசாயிகளிடம் வழங்கப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
        முன்பு மலேசியாவில் விதை சேகரிப்பு மிகவும் பரவலாக இருந்து வந்தது. இதனால் ஆரோக்கியமான பயிர்கள் நமக்கு கிடைத்தன. ஆனால் நிறுவனங்கள் பெருக பெருக பாரம்பரிய விதைகள் ஓரங்கட்டப்பட்டு, இரசாயன விதைகள் பிரபலமாக வர தொடங்கி விட்டதாக இத்திரிஸ் தெரிவித்தார்.
        விதைகள் பாதுகாக்கப்படுவது சட்டவிரோதம் என இந்த நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. உதாரணமாக, ஒரு விவாசாயி ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டைக்காய் நட விரும்பினால் அதன் விதைகளை வாங்குவதற்கு அந்த விவசாயி 180 வெள்ளியிலிருந்து 240 வெள்ளி  வரை  செலவு செய்ய வேண்டும்.
ஆனால், அவர்கள்  விதை சேமிப்பு செய்திருந்தால் இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டிய தில்லை என அவர் தெளிவுப் படுத்தினார்.
      சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் 700 பாரம்பரிய விதைகள் பரிமாறிக் கொள்ளப்பட்ட து.
அதே நேரத்தில் காப்பாரிலிருந்து சித்த மருத்துவ துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த டாக்டர் ஜனனி பூபாலன் மிக சிறப்பான மூலிகை மருத்துவம் பற்றி, செயல் முறை உரையாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
      இந்நிகழ்ச்சியின் போது விதைகள் தொடர்பான விளக்க கையேடு வெளியிடப்பட்டதாக பி.ப.சங்க அதிகாரி என். வி. சுப்பாராவ் தெரிவித்தார்.

Comments