அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுத எழுச்சியோடு புறப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களியுங்கள்! காணொளி வழி நடிகர் கமலஹாசன் வேண்டுகோள்

அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுத எழுச்சியோடு புறப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களியுங்கள்!
காணொளி வழி நடிகர் கமலஹாசன் வேண்டுகோள்

போர்ட்டிக்சனில்   
         இருந்து
குணாளன் மணியம்

போர்ட்டிக்சன், அக்.12-
          மலேசிய அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுத புதிய எழுச்சியோடு புறப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களித்து அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்புங்கள் என்று பிரபல சினிமா நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் போர்ட்டிக்சன் ஒரு காணொளி வழி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

           சகோதரர் அன்வார் அநியாயமாக சிறைவாசம் அனுபவித்துள்ளார். ஆனாலும் அவர் மீண்டும் புதிய எழுச்சியோடு போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் மீண்டும் புகழ் பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மலேசியாவில் புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளதாக அந்த காணொளியில் கமலஹாசன் தெரிவித்தார்.
       போர்ட்டிக்சனில் வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வாரை தேர்வு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று நான் நம்புகிறேன். இதன்வழி இந்திய-மலேசிய உறவும், மலேசிய- தமிழக உறவும் வலுப்பெறும் என்று நம்புகிறேன். புதிய அத்தியாயத்தில்  பயணிக்க விரும்பும் மலேசிய மக்களுக்கு மக்கள் நீதி மைய கட்சியின் வழி வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கமலஹாசன் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
         இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது தீ போல் பரவி விட்டதோடு கமலஹாசனின் இந்த நடவடிக்கை ஆயிரம் கேள்விகளையும் எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments