மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தல்! டத்தோஸ்ரீ எம்.சரவணன்- டான்ஸ்ரீ எம்.ராமசாமி நேரடிப் போட்டி!

மஇகா தேசியத் துணைத்  தலைவர் தேர்தல்!
டத்தோஸ்ரீ எம்.சரவணன்- டான்ஸ்ரீ எம்.ராமசாமி நேரடிப் போட்டி!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.10-
          மஇகா தேசியத் துணைத் தலைவர். பதவிக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன்- தொழிலதிபர் டான்ஸ்ரீ எம்.ராமசாமி இருவரும் நேரடியாக மோதவிருக்கின்றனர்.

           மஇகா தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்காது என்று எதிர்ப்பார்த்த வேளையில் திடீரென்று டான்ஸ்ரீ ராமசாமி டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து களத்தில் குதித்துள்ளார்.

           மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற தேசியத் துணைத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நேற்று பிற்பகல் 2.10 தொடங்கி மாலை 4.10 மணி வரையில் நடைபெற்றது. இதில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு முடிவெடுத்த  தொழிலதிபர் டான்ஸ்ரீ எம்.ராமசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்வழி மஇகா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு நேரடி போட்டி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments