தொழில்திறன், தொழில் பயிற்சி மையங்களுக்கு சாவுமணி அடித்து விட்டு மை ஸ்கில்ஸ் கல்லூரி மீது சிறப்பு கவனம் ஏன்? கமலஹாசனிடம் பேசிய நோக்கம் என்ன? வழக்கறிஞர் பசுபதி நண்பர் என்பதாலா?

தொழில்திறன், தொழில்  பயிற்சி மையங்களுக்கு சாவுமணி அடித்து விட்டு  மை ஸ்கில்ஸ் கல்லூரி மீது சிறப்பு கவனம் ஏன்?   கமலஹாசனிடம் பேசிய நோக்கம் என்ன?
வழக்கறிஞர் பசுபதி நண்பர் என்பதாலா? 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.13-
           மலேசிய தனியார்  தொழில் பயிற்சி,  தொழில்திறன் பயிற்சி மையங்களுக்கு சாவுமணி அடித்து விட்டு இந்தியர்களுக்கு தொழிற்கல்வி, தொழில் பயிற்சி வழங்க கமல்ஹாசன் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குலசேகரன் மை ஸ்கில்ஸ் கல்லூரி  குறித்து பிரத்தியேகமாக  கமலஹாசனிடம் பேசியதன் நோக்கம் என்ன என்று தொழில்  பயிற்சி, தொழில்திறன் பயிற்சி மைய நடத்துநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
         மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும் எச்ஆர்டிஎப், பிடிபிகே ஆகியவற்றை விசாரணை என்ற பெயரில் முடக்கி வைத்ததால் 600க்கும் மேற்பட்ட தனியார் தொழில் திறன் பயிற்சி மையங்கள், 800க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி மையங்கள் முடங்கிப் போயின. இப்பிரச்சினை தொடர்பில் இன்று வரையில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மை ஸ்கில்ஸ் அறவாரியம் நடத்து மை ஸ்கில்ஸ் கல்லூரி குறித்து மட்டும் கவலைப்படும் குலசேகரன் அது குறித்து பிரேத்தியேகமாக சென்னையில் நடிகர் கமல்ஹாசனிடம் பேசியது மக்கள் குறிப்பாக தொழில் பயிற்சி, தொழில்திறன் பயிற்சி மைய நடத்துநர்கள் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
             மனிதவள அமைச்சின் கீழ் இயங்கி வரும் தனியார் தொழில் பயிற்சி, தொழில்திறன் பயிற்சி  மையங்களுக்கு சாவு மணி அடிக்கும் வகையில் அமைச்சர் மாண்புமிகு குலசேகரன் விசாரணை என்ற பெயரில் எச்ஆர்டிஎப் நிதியை நிறுத்தி வைத்துள்ளதால் இதன்  நடத்துநர்கள் பலரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. குலசேகரன்  நடவடிக்கை இப்பயிற்சி மையங்களை குழிதோண்டி புதைப்பாரா என்று அதன் நடத்துநர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில் சென்னையில் நடிகர் கமல்ஹாசனிடம் மை ஸ்கில்ஸ் கல்லூரி குறித்து பேசியதோடு அம்மையத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளதானது  அமைச்சர் குலசேகரனின் உண்மையான நோக்கம் என்ன எனும் கேள்வி எழுந்துள்ளது.
         மை ஸ்கில்ஸ் கல்லூரி ஏற்கெனவே தேசிய முன்னனி அரசாங்கத்திடம் பல லட்சங்களை மானியமாக பெற்றுள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் செடிக்கில்  இருந்தும் பல லட்சங்களை பெற்றள்ளதாக தெரியவந்துள்ளது.
            இந்நிலையில் பிடிபிகே நிதியை ஒட்டு மொத்தமாக மை ஸ்கில்ஸ் கல்லூரிக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளாரா குலசேகரன்? அப்படி இல்லை என்றால் மை ஸ்கில்ஸ் கல்லூரிக்கு மட்டும் கமல்ஹாசனிடம் பேசும் அளவுக்கு முக்கியத்துவம்  ஏன் என்பதை குலசேகரன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மைய நடத்துநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
       மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் பிடிபிகே (PTPK) எனப்படும் தொழில்திறன் பயிற்சி மைய கடனுதவி வாரியம்,  எச்.ஆர்.டி.எப் (HRDF) எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதி வாரியம் கீழ் செயல்படும் தொழில் பயிற்சி மையம் போன்றவற்றின் செயல்பாடுகளை  விசாரணை நடத்துவதாக்க் கூறி அமைச்சர் குலசேகரன் அதனை நிறுத்தி வைத்துள்ளதால் 800க்கும் மேற்பட்ட தனியார் தொழில் பயிற்சி மையங்கள், 600க்கும் மேற்பட்ட தனியார் தொழில்திறன் பயிற்சி மையங்கள் ஆகியவை வாழ்வா? சாவா? என்ற நிலையில்  அபாய கட்டத்தில் இருக்கிறது.
         இதுகுறித்து அமைச்சர் குலசேகரன் எந்த கவலையும்படாதது ஏன் என்று தொழில்திறன், தொழில் பயிற்சி மைய நடத்துநர்கள் கேள்வி எழுப்பினர். தனியார் தொழில் பயிற்சி, தொழில்திறன் மையங்கள் நடத்தும் இந்திய நடத்துநர்களை  அமைச்சர் குலசேகரன் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும். இந்நேரம் விசாரணை முடிந்து ஜூலை மாதம் அது தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது தொடங்கப்படுமா என்று இன்று வரையில்  எந்த அறிகுறியும் தெரியாத நிலையில் தனக்கு வேண்டிய தனியார் பயிற்சி மையமான மை ஸ்கில்ஸ் கல்லூரிக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு வழங்கியதோடு சென்னை வரை சென்று நடிகர் கமல்ஹாசனிடம் பேசியுள்ள  மாண்புமிகு அமைச்சர் குலசேகரன் இதுகுறித்து  விளக்கமளிக்க வேண்டும். அதேநேரத்தில் நம்நாட்டிலுள்ள தனியார் தொழில் பயிற்சி, தொழில்திறன் பயிற்சி மைய பிரச்சினைகள் குறித்து அமைச்சர் குலசேகரன் தீர்வு காண வேண்டும் என்று வேண்டும் என்று தனியார் தொழில் பயிற்சி, தொழில்திறன் மைய நடத்துநர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments