மலேசிய பொருளாதாரம் குறித்து பொய்த் தகவல் வழங்கினால் வீதிப் போராட்டம் நடத்துவோம்! மஇகா பிரசாத் சந்திரசேகரன் எச்சரிக்கை

மலேசிய பொருளாதாரம் குறித்து பொய்த் தகவல் வழங்கினால் வீதிப் போராட்டம் நடத்துவோம்! 
மஇகா பிரசாத் சந்திரசேகரன் எச்சரிக்கை

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.16-
         நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு பொய்த் தகவல் வழங்கினால் வீதிப் போராட்டம் நடத்த த் தயங்க மாட்டோம் என்று தேசிய மஇகா  இளைஞர்  பகுதி சமூகநல பிரிவின் தலைவர் பிரசாத் குணசேகரன் கூறினார்.   
             நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மக்களுக்கு உண்மையான தகவலை வழங்க வேண்டும். பொய்த் தகவலை வழங்கி குழப்பத்தை பிரசாத் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
           மக்கள் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீது நம்பிக்கை வைத்து
ஓட்டு போட்டு ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். இத்தகைய மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும். பொய்த் தகவலை சொல்லி முந்தைய அரசாங்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முயலக்கூடாது என்று மலேசியாவின் அனைத்துலக கடன் தொகை குறித்து கருத்துரைக்கையில்
 பிரசாத் சந்திரசேகரன் அவ்வாறு கூறினார்.
          மலேசியாவின் கடன் தொகை ஒரு திரில்லியன் என்று நம்பிக்கை கூட்டணியின் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறியது தவறு என்று அனைத்துலக மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பேங்க் நெகாராவின் அறிக்கையின்படி மலேசியாவின் கடன் தொகை 1 விழுக்காடு அதிகரித்துள்ளதாகவும் தற்போதைய கடன் தொகை 39 பில்லியன் என்று அறிவித்திருந்தது.
          மலேசியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஆபத்தானதாகும். மலேசிய அரசாங்கத்தில் சில தன்னார்வ அமைச்சர்களால் மலேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் குறிப்பாக நிதியமைச்சர் லிம் குவான் எங் மலேசிய பொருளாதாரம் குறித்து தவறாக அறிக்கைகளை வெளியிட்டிருப்பதால் அனைத்துலக முதலீடுகள் தடுக்கப்படலடுள்ளதாக பிரசாத் சொன்னார்.
         இதன்வழி நம்பிக்கை கூட்டணி தன்னார்வ அரசாங்கம் என்பது தெளிவாகியுள்ளது. நான் ஏற்கெனவே அன்பாக வேண்டுகோள் விடுத்திருந்தேன். ஆனால், இப்போது மலேசிய பொருளாதாரம் குறித்து  தவறான அறிக்கை வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறேன். நம்பிக்கை கூட்டணி அரசியல் நோக்கத்தில் பொய்த் தகவலை வழங்கினால் வீதிப் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டேம் என்று பிரசாத் குணசேகரன் குறிப்பிட்டார்.

Comments