பிகேஆர் கட்சியில் சேவை செய்யும் இந்தியர்களை தேர்வு செய்யுங்கள்! மத்திய செயலவைக்கு போட்டியிடும் எல்.சேகரன் வேண்டுகோள்

பிகேஆர் கட்சியில் சேவை செய்யும் இந்தியர்களை தேர்வு செய்யுங்கள்!
மத்திய செயலவைக்கு போட்டியிடும் எல்.சேகரன் வேண்டுகோள்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.4-
           பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சியில் இந்தியர்கள் பலத்தை நிரூபிக்க சேவை செய்யும் தலைவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மத்திய செயலவைக்கு போட்டியிடும் எல்.சேகரன் வலியுறுத்தியுள்ளார்.

           பிகேஆர் கட்சித் தேர்தலில் மாநில வாரியாக இந்தியர்கள் அணிதிரண்டு வாக்களித்து வருகிறார்கள். எனினும் இந்திய வேட்பாளர்களின் வெற்றி அரிதாகவே இருக்கிறது. ஆகையால், ஒவ்வொரு இந்திய வாக்காளர்களும் இந்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எண் 46 இல் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவருமான எல்.சேகரன் சொன்னார்.
         பிகேஆர் கட்சியில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படக்கூடாது என்றால் ஒவ்வொரு இந்திய வாக்காளர்களும் இந்திய வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மத்திய செயலவைக்கு மொத்தம் 80 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் 20 பேர் மட்டுமே மத்திய செயலவைக்கு செல்ல முடியும். ஆகையால், நாம் 10 இந்தியர்களையாவது மத்திய செயலவைக்கு அனுப்பி வைத்தால்தான் பிகேஆர் கட்சியில்  இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்த முடியும் என்றார் எல்.சேகரன்.
             இந்த கட்சித் தேர்தலில்  நாம் இந்தியர்களின் குறிப்பாக தலைவர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். இந்தியர்கள் வாக்களிப்பு மூலம் இந்த பலத்தை  நிரூபிக்க வேண்டும் என்று எல்.சேகரன் கேட்டுக் கொண்டார்.
          இந்தியர்கள் உரிமையை மீட்க கிள்ளான் வட்டாரம் மட்டுமன்றி சிலாங்கூர் மாநிலம் முழுவதும்  மக்களுக்காக சேவையாற்றி மக்கள் சேவகன் என்று பெயர் பெற்றுள்ள எல்.சேகரன்  எண் 46இல் மத்திய செயலவைக்கு போட்டியிடுகிறார்.   
        மக்கள் பிரச்சினைகளுக்கு குறிப்பாக சிலாங்கூர் மக்கள் பிரச்சினைகளுக்கு  முக்கியத்துவம் வழங்கி துடிப்புடன் செயல்பட்டு வரும் எல்.சேகரன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆசி பெற்ற அணியில் மத்திய செயலவைக்குப் போட்டியிடுகிறார்.
          நான் மக்கள் பிரச்சினைகளுக்கு குறிப்பாக இந்திய மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறேன். கடந்த பொதுத் தேர்தலில் இந்திய வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கினேன். மக்கள் வழங்கிய ஆதரவில் தற்போது மத்திய செயலவைக்குப் போட்டியிடும் தனக்கு வாக்களிக்கும்படி எல்.சேகரன் கேட்டுக் கொண்டார்.
             பிகேஆர் கட்சியின் மத்திய செயலை உறுப்பினர் பதவி மிகவும் முக்கியமான பதவியாகும். அரசாங்கப் பதவிகள் எதிலும் நான் இல்லாததால் தம்மால் சிறப்பான சேவையை வழங்க முடியும் என்றும்  மக்களுக்காக போட்டியிடும் தமக்கு கட்சி உறுப்பினர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் எல்.சேகரன்  கேட்டுக் கொண்டார்.
           கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிகேஆர் கட்சியில் உறுப்பினராக இணைந்த எல்.சேகரன் அரசியலுக்கு வரும் முன் அரசு சாரா இயக்கங்கள் வழி மக்கள் பிரச்சினை, ஆலயப் பிரச்சினை, தமிழ்மொழி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முழு மூச்சாக செயல்பட்டார்.
அதேநேரத்தில் சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் வழி பல ஆண்டுகளாக தமிழ்மொழி சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் எழுப்பி வருகிறார்
எல்.சேகரன்.
           மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எல்.சேகரன் இந்திய மக்களுக்கு சேவையைக் கொண்டு வருவார் என்பதால் பிகேஆர் உறுப்பினர்கள் எல்.சேகரன் எண் 46 எண்ணுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Comments