மாண்புமிகு குணராஜ் சேவைக்கு அங்கீகாரம் உண்டு! பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலாட்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நேர்மையான அரசியல்வாதி குணராஜ் வெற்றி உறுதி

மாண்புமிகு குணராஜ் சேவைக்கு அங்கீகாரம் உண்டு!
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலாட்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நேர்மையான அரசியல்வாதி குணராஜ் வெற்றி உறுதி

குணாளன் மணியம்

கிள்ளான், அக். 12-
           மத்திய செயலவை, கோத்தா ராஜா கிளைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் குணராஜ் சேவைக்கு கண்டிப்பாக அங்கீகாரம் உண்டு என்று பிகேஆர் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

           அரசியலில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலாட்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நேர்மையான அரசியல் நடத்தி வரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் அவர்களின் வெற்றி உறுதி என்று குணராஜ் அவர்களின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


           அரசியலில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு சில அரசியல்வாதிகள் சுயநலப்போக்கில் உழைத்தவர்களை சாப்பிட்ட மங்காய் கொட்டையை வீசுவது போல் வீசி விடுகின்றனர். தங்களுக்கு வேண்டியவர்களை முக்கியப் பதவிகளுக்கு கொண்டு வர போட்டி போடுகின்றனர். அவர்கள் ஒன்றை மறந்து விட்டனர். சாப்பிட்டு மண்ணில் வீசப்பட்ட மங்காய் கோட்டையும் முளைக்கு என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.
           குணராஜ் வான்குடை வழியாக அரசியலுக்கு வரவில்லை. மாறாக அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக முன்னேறி அரசியலுக்கு வந்தவர். இன்று சட்டமன்ற உறுப்பினர் எனும் நட்சத்திரமாக மிளிர்கிறார் குணராஜ்.
           மத்திய செயலவை, கோத்தா ராஜா கிளைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் குணராஜ் கோத்தா ராஜா மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சிறந்த தலைவர். ஆகையால், குணராஜ் அவர்களுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்று குணராஜ் ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments