மஇகாவை வலுப்படுத்த துடிப்போடு செயல்படுங்கள்! மஇகா மகளிர் அணிக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்து

மஇகாவை வலுப்படுத்த துடிப்போடு செயல்படுங்கள்! 
மஇகா மகளிர் அணிக்கு டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வாழ்த்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.8-
           மஇகாவை வலுவான கட்சியாக  மறுதோற்றமளிக்க மஇகா மகளிர் பிரிவு துடிப்போடு செயலாற்ற வேண்டும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
            மஇகா மகளிர் பிரிவுத் தலைவியாக திருமதி உஷா நந்தினி, துணைத் தலைவியாக திருமதி விக்னேஷ்வரி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதானது கட்சியை மேலும் வலுப்படுத்த உதவும். இவர்களின் புதிய தலைமைத்துவம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று நம்புவதாக உஷா நந்தினி, விக்னேஷ்வரி, டாக்டர் தனலெட்சுமி, கிருஷ்ணவேணி மற்றும் உச்சமன்ற, நிர்வாக மன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த போது மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்ஏ.விக்னேஷ்வரன் அவ்வாறு வலியுறுத்தினார்.
          மஇகாவை அடுத்த  3 ஆண்டுகளில் வலுவான கட்சியாக உருவாக்க வேண்டும். இதற்கு மகளிர், இளைஞர் பிரிவின் பங்கு முக்கியமானது. இளைஞர், மகளிர் பிரிவினர் நாடு தழுவிய நிலையில் இளைஞர், மகளிர்களை உறுப்பினராக இணைக்க பாடுபட வேண்டும். அதேநேரத்தில் நடப்பில் இருக்கும் இளைஞர், மகளிர் உறுப்பினர்கள் மஇகாவை வலுப்படுத்த உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ம இ கா தேசிய இளைஞர், மகளிர் பிரிவினர் பாடுபட வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்ஏ.விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

Comments