நாட்டின் வருங்கால பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்வோம்! செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்து

நாட்டின் வருங்கால பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்வோம்!
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்து

குணாளன் மணியம்

போர்ட்டிக்சன், அக்.5-
           நாட்டின் வருங்கால பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.            மலேசிய நாடாளுமன்றத்தில் தமது குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக தம்மை தயார்படுத்திக் கொண்டு வந்துள்ள டத்தோஸ்ரீ அன்வார், நன்கு ஆராய்ந்த பின்னரே போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்வு செய்துள்ளார்.


இத்தொகுதியில் அன்வாரின் வெற்றி உறுதி என்ற போதிலும் ஓட்டுகளைச் சிதறச் செய்ய பலர் ஏவிவிடப்பட்டுள்ளனர். எது எப்படி இருந்தாலும் டத்தோஸ்ரீ அன்வாரை வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டியது நமது கடமையாகும் என்று போர்ட்டிக்சனில்    பிரச்சார கூட்டத்தில் பேசிய குணராஜ் அவ்வாறு தெரிவித்தார்.
            நாட்டின் வருங்கால பிரதமர் ஆவதற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டு வரும் அன்வார் தற்போது போர்ட்டிக்சனில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். போர்ட்டிக்சனில் இந்திய வாக்காளர்கள் 12 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களித்து அவரது வெற்றியை உறுதிச் செய்ய வேண்டும் என்று குணராஜ் சொன்னார்.
           நாட்டின் அடுத்த பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் பதவி ஏற்கும் பட்சத்தில் இந்தியர்கள் பல நிலைகளில் மேம்படுவார்கள். அதேநேரத்தில் போர்ட்டிக்சன் மக்களும் நல்லதொரு மேம்பாட்டை அடைவார்கள் என்று குணராஜ் குறிப்பிட்டார்.
            போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுவதால் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இந்திய வாக்காளர்கள டத்தோஸ்ரீ அன்வாருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று குணராஜ் கேட்டுக் கொண்டார்.

Comments