மஇகாவை வலுப்படுத்த டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரனோடு கரம் கோர்க்கப் போகிறவர்கள் யார்?

மஇகாவை வலுப்படுத்த டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரனோடு கரம் கோர்க்கப் போகிறவர்கள் யார்?

 எழுத்து: 
குணாளன் மணியம்

 கோலாலம்பூர், அக். 20-
           மஇகாவின் அடுத்த துணைத் தலைவர், உதவித் தலைவர், மத்திய செயலவை உறுப்பினர்கள் யார் எனும் கேள்வி கணைகளோடு  இன்று மாலை மஇகா  உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தல்  நடைபெறவிருக்கிறது.   
            மஇகா தேசியத் துணைத்  தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன், டான்ஸ்ரீ ராமசாமி போட்டி வேளையில் 3 உதவித் தலைவர் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் 21  மத்திய செயலவை பதவிகளுக்கு 44 பேர் களம் இறங்கியுள்ளனர்.
           மஇகா தேசியத் தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்  பொறுப்பேற்ற பிறகு மஇகாவை வலுப்படுத்தும்  நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
இவருக்கு பக்கபலமான துணைத், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் யார்? மஇகா கிளையின் செயற்கு உறுப்பினர்கள் யாரை தேர்வு செய்யப் போகிறார்கள்?   
              மஇகா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் போட்டியிடுகிறார். இப்பதவிக்கு போட்டி இருக்காது என்று எதிர்பார்த்த வேளையில் திடீரென்று ஐ.ஆர்.டி.கே.எல்.குழுமத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ ராமசாமி டத்தோஸ்ரீ சரவணனை எதிர்த்து போட்டியிடுகிறார்.         
          கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த மஇகாவின் மறுதேர்தலின் போது டத்தோஸ்ரீ சரவணன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சரவணன் 17 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போதும் நேரடி போட்டியை டத்தோஸ்ரீ சரவணன் எதிர்நோக்கியுள்ளார். இந்தப் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் கட்சியின் 3 உதவித் தலைவர்கள் பதவிக்கு 10 பேர் போட்டியிடுகின்றார்கள். இதில் டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ், உமா ராணி குழும உரிமையாளர் ஏ.கே.ராமலிங்கம், டத்தோ அசோஜன், டத்தோ டி.முருகையா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதேநேரத்தில் 21 மத்திய செயலவை உறுப்பினர்கள் பதவிக்கு 44 பேர் போட்டியிடுகிறார்கள். மஇகாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவர்களோடு கரம் கோர்க்கப் போகிறவர்கள் யார்? யார்?
கிளையின் செயற்கு உறுப்பினர்கள் இன்று முடிவு செய்வார்கள்.

Comments