சீபில்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்! ஆலய உடைப்பு தற்காலிக நிறுத்தம்! திங்கட்கிழமை சிலாங்கூர் மந்திரி பெசாருடன் சந்திப்பு சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தகவல்

சீபில்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்!
ஆலய உடைப்பு தற்காலிக நிறுத்தம்!
திங்கட்கிழமை சிலாங்கூர் மந்திரி பெசாருடன் சந்திப்பு
சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தகவல் 

குணாளன் மணியம்


சுபாங் ஜெயா, அக்.18-
           நாட்டில் 147 ஆண்டு பழைமை வாய்ந்த ஆலயமான சீபில்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய உடைப்பு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி தலையீட்டால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் கூறினார்.


            இந்த ஆலய விவகாரம் தொடர்பில் இந்துக்கள் அடைந்துள்ள மனவேதனை, கொந்தளிப்பு குறித்து மந்திரி பெசார் அமிருடினிடம் எடுத்துரைக்கப்பட்டதால் அக்டோபர் 17 புதன்கிழமை உடைபடவிருந்த ஆலய உடைப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 இந்த ஆலய விவகாரம் தொடர்பில் அக்டோபர் 22 திங்கட்கிழமை காலை மந்திரி பெசார் அலுவலகத்தில் சிறப்பு பேச்சு நடத்தப்படவுள்ளது.

 இதில் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவராசா, ஆலயத்தின் இருதரப்பு நிர்வாகம், மேம்பாட்டு நிறுவனம் ஆகியோருடன் தாமும் கலந்து கொள்ளவிருப்பதால் அனைவரும் அமைதி காக்கும்படி குணராஜ் கேட்டுக் கொண்டார்.

          சீபில்ட் ஆலய விவகாரம் தொடர்பில் இந்துக்களின் மனவேதனையறிந்து  தமது ஒத்துழைப்பை வழங்கிய மந்திரி பெசார் அமிருடினுக்கு மாண்புமிகு குணராஜ் நன்றி தெரித்தார்.

Comments