மஇகாவில் பண அரசியல், சாதி அரசியல் வேண்டாம்!மீறினால் நடவடிக்கை! -டான்ஸ்ரீ விக்னேஷ்வரன்

மஇகாவில் பண அரசியல், சாதி அரசியல் வேண்டாம்!மீறினால் நடவடிக்கை!
-டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் 

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.11-
          மஇகாவில் பண அரசியல், சாதி அரசியல் வேண்டாம். இதனை மீறினால் கட்சித் தலைமை கண்டிப்பாக     நடவடிக்கை எடுக்கும் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்  கூறியுள்ளார்.
           பண அரசியல், சாதி அரசியல் கட்சியை  வலுப்படுத்தாது. மாறாக கட்சிக்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. இதனை வாக்காளர்களான கிளைத் தலைவர்களுக்கு நன்கு தெரியும் என்று மஇகா தேசியப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
         மஇகாவை வலுப்படுத்த கட்சிக்கு உழைத்தவர்கள், சேவையாற்றியவர்கள் மட்டுமே தேவைப்படுகிறார்கள்.
ஆகையால், சாதி அரசியல், பண அரசியல் நடத்துபவர்களுக்கு மஇகாவில் இடமில்லை என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.
           மஇகாவின் தேசியப் பதவிகளுக்கு போட்டியிடும் சேவையாளர்களை தேர்வு செய்தால் மஇகாவை ஒரு மகத்தான, வலுவான கட்சியாக வழிநடத்திட தனக்கு உதவியாக இருக்கும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments