மஇகா கட்டத்திற்கு அருகிலுள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை! டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் தகவல்

மஇகா கட்டத்திற்கு அருகிலுள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை!
டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் தகவல்

குணாளன் மணியம்

ஷா ஆலம், அக்.22-
            மஇகா தலைமையக கட்டத்திற்கு அருகிலுள்ள மஇகாவிற்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் கூறினார்.
            இந்த நிலத்தை தனிநபர் ஒருவர் வாங்கி விட்டார். மஇகாவுக்கு சொந்தமான அந்த நிலத்தை மீட்பதற்காக அவருடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. துன் டாக்டர் சாமிவேலுவும் சம்பந்தப்பட்ட நபரிடம் பேச்சு நடத்தி வருகிறார். ஆகையால், அந்த நிலம் மீண்டும் மஇகாவுக்கு திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று ஷா ஆலமில் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

           மஇகாவுக்கு 1000 கோடி வெள்ளி அசையும் அசையா சொத்துக்கள் உள்ளன. இதில் ஏய்ம்ஸ்ட் கல்லூரியும் அடங்கும். மஇகாவின் கடனும் முடிவுக்கு வருகிறது. ஆகையால், மஇகா உறுப்பினர் பிள்ளைகளுக்கு கல்வி உபகார சம்பளம், உறுப்பினர்களுக்கான பல்வேறு சலுகைகளை அமல்படுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் அம்மாநாட்டில்  குறிப்பிட்டார்.

Comments