மஇகாவின் தேசிய மகளிர் பிரிவு தலைவியாக உஷா நந்தினி ஏகமனதாக தேர்வு! துணைத் தலைவியாக விக்னேஷ்வரி பாபுஜி தேர்வு பெற்றார்!

மஇகாவின் தேசிய மகளிர் பிரிவு தலைவியாக உஷா நந்தினி ஏகமனதாக தேர்வு!
துணைத் தலைவியாக விக்னேஷ்வரி பாபுஜி தேர்வு பெற்றார்!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.8-
         மஇகாவின் தேசிய மகளிர் பிரிவுத் தலைவியாக கூட்டரசு பிரதேசத்தை சேர்ந்த திருமதி உஷா நந்தினி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


            அதேநேரத்தில் மஇகா தேசிய மகளிர் பிரிவு துணைத் தலைவியாக சிலாங்கூர், ஷா ஆலம் மஇகா தொகுதி தலைவி விக்னேஷ்வரி பாபுஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   
         மஇகா தேசிய பதவிகளுக்கான தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தேசிய மகளிர் பிரிவுக்கான தேர்தலில் மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவியாக திருமதி உஷா நந்தினியும் துணைத் தலைவியாக திருமதி விக்னேஷ்வரியும் ஏகமனதாக  தேர்வு பெற்றனர்.
             இந்நிலையில் மகளிர் பிரிவு மத்திய செயலவை உறுப்பினராக உலு லங்காட் தொகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, நெகிரி செம்பிலான், தெலுக்கெமாங் தொகுதி மகளிர் தலைவி டாக்டர் தனலெட்சுமி ஆகியோர் தேர்வு பெற்றனர். மேலும் 12 தேசிய உச்சமன்ற உறுப்பினர்கள், மாநில அளவில் 10 நிர்வாக மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
          இதனிடையே, மஇகா தேசிய இளைஞர் பிரிவுத் தலைவராக தினாளன் ராஜகோபாலு ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு பெற்றிருந்தார். மஇகா தேசிய இளைஞர் பிரிவு தலைவராக தேர்வு பெற்றுள்ள தினாளன் ராஜகோபால் மஇகா  துணைத் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments