மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தல்! சேவையை முன் வைத்து கட்சியை வலுப்படுத்தவே போட்டியிடுகிறேன்! டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவிப்பு

மஇகா தேசியத் துணைத்  தலைவர் தேர்தல்!
சேவையை முன் வைத்து கட்சியை வலுப்படுத்தவே போட்டியிடுகிறேன்!
டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவிப்பு

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.10-
          மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அவர்களுடன் இணைந்து கட்சியை வலுப்படுத்த சேவையை முன்வைத்து போட்டியிடவிருப்பதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் அறிவித்துள்ளார்.

           மஇகா தேசிய துணைத் தலைவர் பதவிக்கு ஏற்கெனவே போட்டியிட்டு 17 வாக்குகளில் தோல்வியடைந்திருக்கிறேன். எனினும் இதன்வழி எனக்கு ஆதரவு இருக்கிறது என்பது நிருபனமாகியுள்ளதால் மீண்டும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
         நான் மஇகாவில் 30 ஆண்டுகளாக இருக்கிறேன். 21 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறேன். எனக்கு கட்சியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. தொகுதி, கிளைத் தலைவர்களுடன் நல்ல உறவு இருக்கிறது. அதேநேரத்தில் மஇகாவில் இதுநாள் வரையில் நான் மேற்கொண்டுள்ள சேவையை முன்வைத்து போட்டியிடுவதால் நான் வெற்றி பெறுவேன் என்று நம்புவதாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.
       மஇகாவில் சில சட்டதிட்டங்கள் மாறியுள்ளதால் 24 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியும். கடந்த காலங்களில் பேராளர்கள் மட்டுமே வாக்களிக்கும் சூழல் இருந்தது.  மேலும் கட்சியின் தேசியத் தலைவர்  டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அவரோடு இணைந்து கட்சியை வலுப்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் குறிப்பிட்டார்.     
           மஇகா தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு போட்டி இருக்காது என்று எதிர்ப்பார்த்த வேளையில் திடீரென்று டான்ஸ்ரீ ராமசாமி டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து களத்தில் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments