குழப்பத்தை ஏற்படுத்த முயல வேண்டாம்! மஇகா தேர்தல் நியாயமாகவே நடந்தது! டான்ஸ்ரீ ராமசாமியின் மனு விசாரிக்கப்படும்! -டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன்

குழப்பத்தை ஏற்படுத்த முயல வேண்டாம்!
மஇகா தேர்தல் நியாயமாகவே நடந்தது!
டான்ஸ்ரீ ராமசாமியின் மனு விசாரிக்கப்படும்!
-டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.22-
            மஇகா தேர்தல் நியாயமாகவே நடைபெற்றது. இதில் எந்த குளறுபடியும் இல்லை. தேவை இல்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் கூறினார்.

           ம இ கா தேர்தல் சுமூகமாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகவே விடிய விடிய தேர்தல் முடிவுகள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டன. இதில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை.
ஆனால், ஒரு சிலர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.
           மஇகா தற்போது எதிர்க்கட்சியாக உள்ளது. இதில் முறைகேடு செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஆகையால், கள்ள ஓட்டு போடப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் சொன்னார்.
           தேர்தலில் முறைகேடு நடந்ததாக டான்ஸ்ரீ ராமசாமி வழங்கியுள்ள மனுவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழு விசாரிக்கும். ஆகையால், மஇகா தேர்தல் குறித்து  தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரன் கேட்டுக் கொண்டார்.

Comments