நமது உரிமைகளை கேட்க மஇகா வலுவான கட்சியாக இருக்க வேண்டும்! செனட்டர் டத்தோ டி.மோகன் வலியுறுத்து

நமது உரிமைகளை கேட்க மஇகா வலுவான கட்சியாக இருக்க வேண்டும்!
செனட்டர்
டத்தோ டி.மோகன் வலியுறுத்து

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.22- 
            நாட்டில் நமது உரிமைகளை கேட்டறிவதற்கு மஇகா வலுவான கட்சியாக இருக்க வேண்டும் என்று மஇகா தேசிய உதவித் தலைவர்  செனட்டர் டி.மோகன் கூறியுள்ளார்.


           இப்போது கட்சியின் உறுப்பினர்கள் மஇகாவின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் மூலம் சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு வித்திடமுடியும் என டத்தோ டி. மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.
         மஇகாவின் 3 உதவித் தலைவருக்கான தேர்தலில் முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளதானது சமுதாய மக்களுக்கான சேவையை துடிப்போடு மேற்கொள்ள உதவும். மஇகா உறுப்பினர்களுக்கு சேவையாற்ற நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்ள உதவித் தலைவர் பதவி ஒரு தளமாக அமையும் என்று நான் நம்புகிறேன். நாடு தழுவிய நிலையில் மஇகாவினர் தனக்கு மகத்தான ஆதரவு வழங்கி வெற்றி பெறச் செய்துள்ளதாக 9,093 வாக்குகளைப் பெற்று உதவித் தலைவர் பதவியை தக்கவைத்ததோடு முதலிடத்தை பிடித்த டத்தோ த.மோகன் சொன்னார்.
         உதவித் தலைவர் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் எனக்கு மகத்தான ஆதரவு வழங்கினர். இதற்காக கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வெற்றியானது சமுதாயத்திற்கான சேவையை இன்னும் அதிகப்படுத்தும். நமது உரிமைகளை கேட்டறிவதற்கு வலுவாக மஇகா இருக்க வேண்டும். கட்சி உறுப்பினர்கள் மஇகா மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையின் மூலம் சமுதாயத்தின் உருமாற்றத்திற்கு வித்திடமுடியும் என டத்தோ டி. மோகன் குறிப்பிட்டார்.

Comments