சிலாங்கூர் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார்! தேசிய தலைவரோடு இணைந்து பணியாற்றுவோம்! -செலாயாங் தொகுதித் தலைவர் எம்.பி.ராஜா

சிலாங்கூர் மாநிலத்தில் முதல் இடம் பிடித்தார்!
தேசிய தலைவரோடு இணைந்து பணியாற்றுவோம்!
-செலாயாங் தொகுதித் தலைவர் எம்.பி.ராஜா

குணாளன் மணியம்

கோலாலம்பூர், அக்.22-
            மஇகாவை வலுப்படுத்த அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரனோடு இணைந்து வேலை செய்யவிருப்பதாக செலாயாங் தொகுதித் தலைவர் எம்.பி.ராஜா கூறினார்.
          மஇகா தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறது. கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்கள் நோக்கம். இதற்காக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஷ்வரனோடு இணைந்து பணியாற்றுவோம் என்று எம்.பி.ராஜா சொன்னார்.
            மஇகாவில் கடந்த 33 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வரும் எம்.பி.ராஜா படிப்படியாக முன்னேறி தற்போது தொகுதித் தலைவர்  பதவி வகித்து வருகிறார். செலாயாங் தொகுதியில் சிறந்த சேவையாற்றி வரும் எம்.பி.ராஜா அண்மையில் நடந்த தேர்தலில் மீண்டும் தொகுதித் தலைவராக வெற்றி பெற்றார்.
           இந்நிலையில் சிலாங்கூர் மாநில செயற்குழுவுக்கான தேர்தலில் செலாயாங் தொகுதி மஇகா தலைவர் எம்.பி.ராஜா முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments