சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்! நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு பெற்ற மஇகாவிற்கு பாராட்டுக்கள்! -டத்தோ எம்.சம்பந்தன்

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்!
நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு பெற்ற மஇகாவிற்கு பாராட்டுக்கள்!
-டத்தோ எம்.சம்பந்தன்

குணாளன்  மணியம்

    சுபாங் ஜெயா, நவ.30-
       சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில்  ஓன் சிட்டி நிறுவனம் நிலத்தை எடுத்துக் கொள்வதற்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில்  இடைக்கால தடையுத்தரவு பெற்ற மஇகாவின் நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் கூறியுள்ளார்.
ADVERTISEMENT- விளம்பரம்


ADVERTISEMENT- விளம்பரம்

         இந்த ஆலய விவகாரம் தொடர்பில் ஓன் சிட்டி நிறுவனத்திற்கு எதிராக ராமசந்திரன் மற்றும் 49 பேர் மஇகா சார்பில்  இடைக்கால தடையுத்தரவு கேட்டு செய்திருந்த விண்ணப்பத்திற்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவுபடி 11.1.2019 வரையில் ஓன் சிட்டி நிறுவனம் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் ஆலய நிலத்தை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையை மேற்கொண்ட மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரனை பாராட்ட வேண்டும் டத்தோ எம்.சம்பந்தன் குறிப்பிட்டார்.
         ம இ கா மேற்கொண்ட நடவடிக்கையினால் நமக்கு காலக்கெடு கிடைத்துள்ளது. இந்த வழக்கு மேற்கண்ட நாளில் அல்லது பின்னர் ஒரு நாளில்  விசாரணைக்கு வரும் போது நமது வழக்கு சாரம்சத்தை தெரிவிக்க முடியும் என்றார் டத்தோ சம்பந்தன்.
        இந்த சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் அதே இடத்தில் நிலை பெற வேண்டும் என்று மக்கள்  போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த அக்டோபர் 26ஆம் நாள் ஓன் சிட்டி நிறுவனம் நீதிமன்ற ஆணையுடன் ஆலய சிலைகளை அகற்ற வந்தது. ஆனால், அப்போது நடந்த பேச்சில் நவம்பர் 22 வரையில் காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
        இந்நிலையில் கடந்த நவம்பர் 26 இல்
சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன்  ஆலயத்தில் கடும் தாக்குதல் நடந்தது. இதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆலய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
         இந்த ஆலய விவகாரம் தொடர்பில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் நல்லதொரு தீர்வை கண்டு ஆலய நிலத்தை ஆலயத்திடம் வழங்க வேண்டும் என்று டத்தோ எம்.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.
           இந்த ஆலய விவகாரம் தொடர்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொடுத்திருந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ராமசந்திரன் மற்றும் 49 பேர்  மஇகா சார்பில் செய்திருந்த தடையுத்தரவு விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments