சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள இடைக்கால தடையுத்தரவு! நிலத்தை மீட்க ம இ கா சட்ட ஆலோசனை மேற்கொள்ளும்! - டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள  இடைக்கால தடையுத்தரவு!
நிலத்தை மீட்க ம இ கா சட்ட ஆலோசனை மேற்கொள்ளும்!
- டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

குணாளன்  மணியம்

    சுபாங் ஜெயா, நவ.30-
       சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில்  ஓன் சிட்டி நிறுவனம் நிலத்தை எடுத்துக் கொள்வதற்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில்  இடைக்கால தடையுத்தரவு பெறப்பட்டிருப்பதால் நிலத்தை மீட்க மஇகா சட்ட ஆலோசனை மேற்கொள்ளும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கூறினார்.

ADVERTISEMENT- விளம்பரம்


ADVERTISEMENT- விளம்பரம்

       மஇகாவின் நடவடிக்கையினால் அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் நாள் வரையில் நமக்கு காலக்கெடு கிடைத்துள்ளதால் திறன் பெற்ற சட்ட வல்லுனர்களைக் கொண்டு வழக்கை நடத்தி நிலத்தை மீட்க மஇகா பாடுபடும் என்று மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
         இந்த ஆலய விவகாரம் தொடர்பில் ஓன் சிட்டி நிறுவனத்திற்கு எதிராக மஇகா சார்பில் செய்யப்பட்டிருந்த   இடைக்கால தடையுத்தரவு விண்ணப்பத்திற்கு ஷா ஆலம் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவுபடி 11.1.2019 வரையில் ஓன் சிட்டி நிறுவனம் ஆலய நிலத்தை எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் ஆலய நிலத்தை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் விக்னேஷ்வரன்.
         மஇகா மேற்கொண்ட நடவடிக்கையினால் நமக்கு காலக்கெடு கிடைத்துள்ளது. இந்த வழக்கு மேற்கண்ட நாளில் அல்லது பின்னர் ஒரு நாளில்  விசாரணைக்கு வரும் போது சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்காடி நிலத்தை மீட்க முடியும் என்று டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

Comments