சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்! தீர்வு காண மாநில அரசு, இந்தியத் தலைவர்கள் உதவ வேண்டும் டத்தோ எம்.சம்பந்தன் வேண்டுகோள்

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்!
தீர்வு காண மாநில அரசு, இந்தியத் தலைவர்கள் உதவ வேண்டும்
டத்தோ எம்.சம்பந்தன் வேண்டுகோள்

குணாளன் மணியம்
  கோலாலம்பூர், நவ.30-
           சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் அதே இடத்தில் நிலை பெறுவதற்கு சிலாங்கூர் மாநில சட்டமன்ற, நாடாளுமன்ற இந்தியர்கள் மாநில அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்  என்று ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.


ADVERTISEMENT- விளம்பரம்


ADVERTISEMENT- விளம்பரம்


        இந்த ஆலயத்தை அதே இடத்தில் நிலை நிறுத்த பலரும் பாடுபட்டு வருகின்றனர். இந்த ஆலய நிலம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் அமர்ந்து பேச்சு நடத்தவிருப்பதாக சிலாங்கூர் மந்திரி புசார்  அறிவித்திருக்கிறார். இந்த ஆலயம் அதே இடத்தில் நிலைபெற வேண்டும் என்று இந்து மக்கள் விரும்புவதால்  சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஓன் சிட்டி நிறுவனத்திடம் பேச்சு நடத்தி நிலத்தை ஆலயத்திடம் வழங்க வேண்டும் என்று சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
         சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன்  ஆலயத்தில் கடந்த நவம்பர் 26இல் நடந்த கடும் தாக்குதல் சம்பவம் போல் இனியும் நடக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த சிலாங்கூர் மாநில இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு அமைச்சர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று டத்தோ சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.

Comments