பத்து நாடாளுமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி உபசரிப்பு! டிசம்பர் 15 சனிக்கிழமை செந்தூல் (2) தேசிய ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடைபெறும்! பொது மக்களுக்கு மாண்புமிகு பி.பிரபாகரன் அழைப்பு

பத்து நாடாளுமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் தீபாவளி உபசரிப்பு!
டிசம்பர் 15 சனிக்கிழமை செந்தூல் (2) தேசிய ஆரம்பப் பள்ளி வளாகத்தில்  நடைபெறும்!
பொது மக்களுக்கு மாண்புமிகு பி.பிரபாகரன் அழைப்பு

கோலாலம்பூர், டிச.13-
          பத்து  நாடாளுமன்றத் தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெறும் தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்பில் பத்து தொகுதி மக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளும்படி அதன் நாடாளுமன்ற உறுப்பினர்
மாண்புமிகு பி.பிரபாகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
          இந்த தீபாவளி நல்லெண்ண விருந்துபசரிப்பு டிசம்பர் 15 இரவு 7.30 மணிக்கு செந்தூல் (2) தேசிய ஆரம்ப பள்ளி வளாகத்தில்  நடைபெறவிருக்கிறது. கலைநிகழ்ச்சியுடன் கூடிய  இந்த விருந்துபசரிப்பில் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவிருப்பதால் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளும்படி இளம் நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு பி.பிரபாகரன்  கேட்டுக் கொண்டுத்துள்ளார்.
           பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும்  முதல் தீபாவளி பொது உபசரிப்பு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments