பள்ளி உபகரண பொருட்கள் வாங்க வெ.50 ஆயிரம்! கல்வி கற்க பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது! - டத்தோ அப்துல் மாலிக்

பள்ளி உபகரண பொருட்கள் வாங்க வெ.50 ஆயிரம்!
கல்வி கற்க பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது!
- டத்தோ அப்துல் மாலிக்

குணாளன் மணியம்,
படங்கள் : ஹரிஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், டிச.22-
      மாணவர்கள் கல்வி கற்க பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அப்துல் மாலிக் டஸ்தீகர்  கூறினார்.
இந்நாட்டில் இருக்கும் பி40 நடுத்தர வசதி கொண்ட மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு புத்தகப் பை, பள்ளி சீருடை,எழுது கோல் உள்ளிட்ட  பள்ளி உபகரணப் பொருட்களை வாங்குவதற்கு சிரம்பப்படக் கூடாது என்பதற்காக நாடு தழுவிய நிலையில் 340 பிள்ளைகளுக்கு 50 ஆயிரம் வெள்ளி செலவில் பள்ளி உபகரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக 'மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2019' திட்டத்தில் கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 151 பள்ளி பிள்ளைகளுக்கு சாரா ஹக்கஸ் குளோப் மால் பேரங்காடியில் உபகரணப் பொருட்கள் வழங்கிய போது செய்தியாளர்களிடம் கூறினார்.
 " நான் முதல் முறையாக பள்ளி பிள்ளைகளுக்கு பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கியிருக்கிறேன். இதன்வழி பி40 குறைந்த வருமானம் பெறும் மக்களின் சுமை குறையும் இதற்காக கடந்த ஒரு மாத காலம் இப்பொருட்கள் தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு வழங்கியுள்ளதாக டத்தோ மாலிக் தேசம் வலைத்தளத்திடம் தெரிவித்தார்.
 
இந்த "மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2019" பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு பினாங்கு, தெலுக் இந்தான், செர்டாங் தமிழ்ப்பள்ளி போன்ற இடங்களில்தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார் டத்தோ அப்துல் மாலிக்.

"நான் மாணவர்களுக்கு பள்ளி உபகரணப் பொருட்களை இப்போது முதல் முறையாக வழ்ங்கினாலும் கூட கடந்த காலங்களில் தனித்து வாழும் தாய்மார்கள், ஏழை மக்கள், முதியவர்கள் என்று பலருக்கு பெருநாள் காலங்களில் வழங்கியிருக்கிறோம். ஹஜ் யாத்திரைக்கு செல்லும் முஸ்லிம் மக்களுக்கும் உதவி வழங்கியிருக்கிறோம்.


இதன்வழி ஒரு மனமகிழ்ச்சி ஏற்படுகிறது. மாணவர்கள், மக்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி எங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்துகிறது" என்றார் டத்தோ அப்துல் மாலிக்.இந்த நிகழ்வில் 151 மலாய், இந்திய மாணவர்களுக்கு உணவளித்து பள்ளி உபகரணப் பொருட்களை வழங்கினார் டத்தோ அப்துல் மாலிக்.

 டத்தோ மாலிக் தமது மாலிக் ஸ்டிரீம்ஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் மூலம் "கபாலி" திரைப்படத்தை முழுக்க முழுக்க மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தி சூப்பர் ஸ்டார் ரஜினியோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ரஜினிகாந்த் 60 நாட்கள் வரையில் மலேசியாவின்  பல்வேறு பகுதிகளில் தங்கி படப்பிடிப்பு நடத்தியதற்கு டத்தோ அப்துல் மாலிக் மூலகாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments