சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்தை சிறப்பாக கையாண்ட காவல் துறைக்கு அமைச்சர் வேதமூர்த்தி பாராட்டு!

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரத்தை சிறப்பாக கையாண்ட காவல் துறைக்கு அமைச்சர் வேதமூர்த்தி பாராட்டு!

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.1-
          சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம், மறுநாள் நடந்த கலவரம் ஆகியவற்றை மிகவும் சிறப்பாக கையாண்ட  காவல் துறைக்கு பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
          சீபீல்ட் ஆலய விவகாரத்தில் காவல் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதில் காவல் துறை உயர்தரமான சேவையை வழங்கியுள்ளது. மலேசிய இந்தியர்கள் இதற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக வேதமூர்த்தி சொன்னார்.ADVERTISEMENT- விளம்பரம்


ADVERTISEMENT- விளம்பரம்
         தேசிய காவல் படைத் தலைவர் பவ்சி ஹாருண்  துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொண்டதால் ஆலய நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்காக ஐஜிபியை  பாராட்டுகிறேன்.  அதேநேரத்தில்  இந்த ஆலய தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த  ஐஜிபி வாக்குறுதி வழங்கியுள்ளதை வரவேற்பதாக அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்தார்.

Comments