சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் அமைச்சர் வேதமூர்த்தியிடம் புக்கிட் அமான் காவல் துறை விசாரணை!

சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் அமைச்சர் வேதமூர்த்தியிடம் புக்கிட் அமான் காவல் துறை விசாரணை!

குணாளன் மணியம்

பெட்டாலிங் ஜெயா, டிச.5-
        சீபீல்ட் ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தியிணம் புக்கிட் அமான் காவல் துறை அதிகாரிகள்   விசாரணை நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
          வேதமூர்த்தி நேற்று செவ்வாய்க்கிழமை  இரவு 8.05 மணியளவில் வெள்ளை நிற டோயோட்டா கேம்ரி ரக காரில்  புக்கிட் அமான் காவல் நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் இரவு 11.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். புக்கிட் அமான் காவல் துறை பிரதான வாசலில் காத்திருந்த ஊடகவியலாளர்களை பார்த்து கையசைத்துச் சென்றார் வேதமூர்த்தி.
           காவல் துறை  கிட்டத்தட்ட 3  மணிநேரத்திற்கு மேல் வேதமூர்த்தியிடம் தேச நிந்தனை, இனதுவேஷ அடிப்படையில்  விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதாக தெரிகிறது.   
            சீபீல்ட் ஆலயத்தில் நடந்த தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உறுதிப்படுத்தினார். அதேநேரத்தில் ஐஜிபி டான்ஸ்ரீ முகமட் ஃபுசி ஹாருண் வேதமூர்த்தி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக  நேற்று கூறியிருந்தார்.
            இந்த விசாரணை தொடர்பில் வேதமூர்த்தி  இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. இது தொடர்பில்  தேசம் வலைத்தளம் அமைச்சர்  வேதமூர்த்தியை தொடர்பு கொண்டு வருகிறது.
        கடந்த நவம்பர் 26இல் சீபீல்ட் ஸ்ரீ மகாமாரியம்மன்  ஆலயத்தில் கடும் தாக்குதல் நடந்தது. இதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆலய விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments