"சொத்து எதுவும் என்னிடம் இல்லை" வருமானத்தை எஸ்பிஆர்எம்மிடம் அறிவித்து விட்டேன்! -அமைச்சர் வேதமூர்த்தி

"சொத்து எதுவும் என்னிடம் இல்லை"
வருமானத்தை எஸ்பிஆர்எம்மிடம் அறிவித்து விட்டேன்!
-அமைச்சர் வேதமூர்த்தி

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.10- 
        தன்னிடம் சொத்து இல்லாத காரணத்தினால் வருமான விவரங்களை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கி விட்டதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.
          "என்னிடம் சொத்து இருந்தால்தானே அறிவிக்க முடியும்"? சொத்து இல்லை, ஆகையால் வருமான விவரங்களை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கி விட்டேன்" என்று வேதமூர்த்தி தெரிவித்தார். 
       ‘இந்திய சமுதாய போராட்டத்திற்காக சம்பாதித்த பணமெல்லாம் செலவானதால் சொத்து எதுவும் என்னிடம் இல்லை. ஆகையால்,
எம்ஏசிசியிடம் அறிவிப்பதற்குச் எதுவும் என்னிடம்  இல்லை என்றார் வேதமூர்த்தி.
      “காலம் முழுவதும் போராளியாக இருந்து விட்டேன். நான் சம்பாதித்த வருமானம் மொத்தத்தையும் ஏழை இந்தியர்களுக்குப் போராடுவதில் செலவு செய்து விட்டேன். என்னிடம் சொத்து எதுவும் இல்லை. சம்பாதித்தது எல்லாம் செலவாகி விட்டது என்று ஒரு வழக்கறிஞருமான வேதமூர்த்தி சொன்னார்.
         நாட்டில் 13 எம்பிகள் இன்னும் தங்களின் சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என எம்ஏசிசி அறிவித்துள்ளது தொடர்பில் வேதமூர்த்தி அவ்வாறு கருத்துரைத்தார்.

Comments