சீபீல்ட் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஏன் வாங்க வேண்டும்? ம.இ.கா ஆட்சிக்குழுவில் செய்த முடிவை அமல்படுத்துங்கள்! -டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

சீபீல்ட் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை ஏன் வாங்க வேண்டும்?
ம.இ.கா ஆட்சிக்குழுவில் செய்த முடிவை அமல்படுத்துங்கள்!
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன்

குணாளன் மணியம்


கோலாலம்பூர், டிச.11-
         ம.இ.கா காலத்தில் சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் முடிவு செய்யப்பட்ட சீபீல்ட் ஆலய நிலத்தை ஏன் வாங்க வேண்டும் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
         சீபீல்ட் ஆலய நில  விவகாரத்தில் யாருக்கும் முடிவு எடுக்கத் தெரியவில்லை. இந்த ஆலயம் இங்குதான் இருக்க வேண்டும். இது ஆலயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்று ம.இ.கா காலத்தில் சிலாங்கூர் ஆட்சிக்குழுவில் முடிவு செய்யப்பட்ட விஷயம். இதற்கு எழுத்துப்பூர்வமான ஆதாரம் உள்ளது. தனிநபர்கள் நிலத்தை தாரைவார்த்துக் கொடுத்தால் என்ன செய்ய முடியும்? இப்போது பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து விட்டதால் அதனை பொருட்படுத்தாமல் ஆலய நிலம் என்ற பழைய ஆட்சிக்குழு முடிவை அமல்படுத்த வேண்டியதுதானே என்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தில் செய்தியாளர்களிடம் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவ்வாறு சொன்னார்.
            அந்த நிலம் ஏற்கெனவே சீபீல்ட் ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதனை வாங்க வேண்டிய அவசியம் என்ன? அது நமது நிலம்! அதனை ஏன் வாங்க வேண்டும்? சிலாங்கூர் மந்திரி புசார் அந்த நிலத்தை வாங்க முடியாது என்றெல்லாம் கூறியுள்ளார். அவர் பழைய சிலாங்கூர் ஆட்சிக்குழு முடிவை அமல்படுத்தினாலே பிரச்சினை தீர்ந்தது. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்றார் விக்னேஷ்வரன்.
          சீபீல்ட் ஆலய பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை இன்று வரை இவர்களால் காண முடியவில்லை. ஆனால், பாடாங் ஜாவா ஆலயம் 2007இல் உடைக்கப்பட்டு அதேஇடத்தில் மீண்டும் கட்டி கொடுக்கப்பட்டது. அந்த ஆலயத்திற்கு தேசிய முன்னனி அரசாங்கத்தால்  மானியமும் வழங்கப்பட்டது  இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.

Comments