மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின் விசுவாசம் திரைப்பட போஸ்டர் காணொளி டிஎஸ்ஆர் திரையரங்கில் வெளியீடு கண்டது!

மலேசிய தல அஜித் ரசிகர்  நற்பணி மன்றத்தின் விசுவாசம் திரைப்பட போஸ்டர் காணொளி டிஎஸ்ஆர்  திரையரங்கில் வெளியீடு கண்டது!

ஷா ஆலம், டிச.14- 
        மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணிமன்றத்தின் விசுவாசம் திரைப்பட போஸ்டர் காணொளி டிஎஸ்ஆர்  திரையரங்கில் வெளியீடு கண்டதாக அதன் தலைவர் தேவேந்திரன் கூறினார்.
           தல அஜித் நடித்துள்ள விசுவாசம் திரைப்படம்  எதிர்வரும் தைப்பொங்கல் நாளில் திரையீடு காணவிருக்கிறது. இந்நிலையில் திரைப்படத்திற்கான காணொளியை விசுவாசம் திரைப்படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.           தல அஜித் நடித்துள்ள விசுவாசம் திரைப்படம்  எதிர்வரும் தைப்பொங்கல் நாளில் திரையீடு காணவிருக்கிறது. இந்நிலையில் திரைப்படத்திற்கான காணொளியை விசுவாசம் திரைப்படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.


 அந்த 47 வினாடி காணொளியில் தல அஜித் சம்பந்தப்பட்ட பல காட்சிகள், மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின் சேவைகள், பத்திரிகை செய்திகள் அடங்கிய காட்சிகளை இணைத்து அரை மணிநேர காணொளியாக டிஎஸ்ஆர் திரையரங்கில் திரையிடப்பட்டது. இது மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி  மன்றத்தினர் முதல் முறையாக இதனை செய்துள்ளனர் என்றார் அவர்.
        இந்நிகழ்வில் மலேசிய தல அஜித் ரசிகர் நற்பணி  மன்றத்தினர், அஜித் ரசிகர்கள் என்று 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மலேசியாவில் தல அஜித் ரசிகர் நற்பணி மன்றத்தின்  போஸ்டர் காணொளி முதல் முறையாக வெளியிடப்பட்டதால் தமிழ்நாட்டில் அஜித் ரசிகர்  மன்றத்தினர் இதுகுறித்து பரவலாக பேசி வருவதாக தேவேந்திரன் சொன்னார்.

Comments