சேவையாற்றும் போது மரணமடைந்த முகமட் அடிப் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்! டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இரங்கல்

சேவையாற்றும் போது  மரணமடைந்த  முகமட் அடிப் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கிறோம்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் இரங்கல்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.18-
       நாட்டிற்காக சேவையாற்றும் போது மரணமடைந்த மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மறைவு பேரிழப்பாகும்  என்று  மலேசிய மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

     நாட்டிற்காக சேவையாற்றும் பட்சத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்து ஆபத்தான நிலையில் 3 வார காலம் ஐஜேஎன்  மருத்துவமனையில் கிகிச்சைப் பெற்று  உயிரிழந்த அடிப்பை  இழந்து துயர்மிகு மறைவால் வாடியிருக்கும் அவரின் குடும்பத்தாரின் துயரில் பங்கு கொள்வதாக மேலவைக் கூட்டத்தில் இரங்கல் செய்தி  வாசிக்கும் போது மஇகா தேசியத் தலைவருமான  டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
      அடிப்பின்  மரணம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் நாட்டிற்கு பேரிழப்பு.  இதனால்  துயரத்தில் மூழ்கியிருக்கும் தீயணைப்பு படையினர், குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
        அடிப்பின் மரணம் பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கும்  என்று நம்புகிறேன் என்றார் அவர்.
        இந்த சோதனையான நேரத்தில் அனைவரும் அமைதி காக்க வேண்டும். அன்னாரின் குடும்பம் எதிர்கொண்டுள்ள மீளாத் துயரில்  தாங்களும்  இணைந்து கொள்வதாக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
           மேலவை கூட்டத் தொடர் தொடங்கப்பட்ட மேலவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments