மலேசிய தெலுங்கு சங்கத்தின் தெலுங்கு மொழி, நன்னெறி கல்வி முகாம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்! டத்தோ டாக்டர் அச்சயகுமார் நம்பிக்கை

மலேசிய தெலுங்கு சங்கத்தின் தெலுங்கு மொழி, நன்னெறி கல்வி முகாம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்!
டத்தோ  டாக்டர் அச்சயகுமார் நம்பிக்கை

செய்தி: 
குணாளன் மணியம்
படங்கள்: ஹரிஸ்ரீநிவாஸ்

ரவாங், டிச.19-
      மலேசிய தெலுங்கு சங்கத்தின் தெலுங்கு மொழி, நன்னெறி முகாம் தெலுங்கு மாணவர்களுக்கு கலை, கலாச்சாரம், பண்பாடு, தாய்மொழி விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர்  அச்சயகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

          தெலுங்கு மாணவர்கள் மத்தியில் தெலுங்கு மொழி கல்வியை நிலைநிறுத்த கடந்த டிசம்பர் 8ஆம் நாள் தொடங்கிய இந்த முகாம் டிசம்பர் 24ஆம் நாள் முடிவடையும் தருவாயில் மாணவர்கள் தெலுங்கு மொழி, கலை, கலாச்சாரம் சார்ந்த பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சின் அதிகாரி டாக்டர் குமரவேலுவிடம் சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த விளக்கமளிப்பு கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் அவ்வாறு சொன்னார்.

           மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைமையகக் கட்டிடம் இவ்வாண்டு மத்தியில் திறப்பு விழா கண்ட பிறகு அதில் பல தெலுங்கு பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
நான்கு மாடி கட்டடத் தொகுதிகளைக் கொண்ட தலைமையக்தில் மாணவர்களுக்கான பல வசதிகள் இருப்பதாகவும் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த முகாம் 14ஆவது முறையாக சொந்த கட்டடத்தில் நடைபெறுவதாகவும் இதில் நாடு தழுவிய நிலையில் இருந்து 300 மாணவர்கள் கலந்து கொண்டிருப்பதாகவும் டாக்டர் அச்சயகுமார் கூறினார்.
     
ரவாங், சுங்கை சோ அருகில் உள்ள மலேசிய தெலுங்கு சங்கத்தின் புதிய, சொந்த கட்டடத்தில்  தெலுங்கு வகுப்புகள், மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள், தெலுங்கு சங்கத்தின் நடவடிக்கைகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தெலுங்கு மொழி, நன்னெறி முகாம் டிசம்பர் 24இல் முடிவடைவதாகவும் அதனை தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ பி.சகாதேவன் நிறைவு  செய்து வைக்கவிருப்பதாக டத்தோ டாக்டர் அச்சயகுமார் குறிப்பிட்டார்.

Comments