குவாங் லாடாங் பாரு இந்தியர் சமூக இயக்கத்தின் சமூகப் பணிகள் தொடரும்! தீபாவளி உபசரிப்பில் தலைவர் ரத்தினம் தகவல்

குவாங் லாடாங் பாரு இந்தியர் சமூக  இயக்கத்தின் சமூகப் பணிகள் தொடரும்!  தீபாவளி உபசரிப்பில் தலைவர் ரத்தினம் தகவல்

குணாளன் மணியம்

 குவாங், டிச.11-
           குவாங் லாடாங் பாரு இந்தியர் சமூக இயக்கத்தின் சமூகப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தலைவர் ரத்தினம் கூறியுள்ளார்.


           நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் ஒத்துழைப்பில் குவாங் சட்டமன்றத் தொகுதியின் ஆதரவில் ஆண்டுதோறும் பல சமூகப் பணிகளை குவாங் லாடாங் பாரு இந்திய மக்களுக்காக மேற்கொண்டு வருகிறது.


இந்த சமூகப் பணிகள்  தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று லாடாங் பாருவில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பில் உரையாற்றுகையில் ரத்தினம்  சொன்னார். 

             இந்த தீபாவளி பொது உபசரிப்பு ஆண்டுதோறும் நடைபெற்று வருவதாகவும் இந்நிகழ்வு ஆண்டுதோறும் தொடர்ந்து  நடத்தப்படும் என்று லாடாங் பாரு இந்தியர் சமூக இயக்கத்தின் செயலாளர் ராஜன் சொன்னார்.

         இந்த தீபாவளி உபசரிப்பில் நங்கை ஆர்ட்ஸ் நடனக்குழுவினர் சிறப்பான நடனம் வழங்கினர். இதில் பொதுமக்கள் பலருக்கு பரிசு கூடைகள் வழங்கப்பட்டன.

மேலும் அதிர்ஷ்டக் குழுக்கில் பரிசுகளும் வழங்கப்பட்டன.
        இந்த தீபாவளி உபசரிப்பில் குவாங் சட்டமன்ற அலுவலக ஒருங்கிணைப்பாளர், நகராண்மைக்கழக உறுப்பினர் டத்தோ ஹாஜி அஸ்மான் யாக்கோப், குவாங் சட்டமன்ற தொகுதி துணை ஒருங்கிணைப்பாளர் துவான் ஜைலான் இஸ்மாயில், வட்டார தொழிலதிபர்கள், கிராமத்துத் தலைவர்கள், பொதுமக்கள் என்று 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments