ஒரே சமுதாயமாக ஒற்றுமைக்கு வித்திடுவோம்! மாண்புமிகு பிரபாகரன் புத்தாண்டு வாழ்த்து

ஒரே சமுதாயமாக ஒற்றுமைக்கு வித்திடுவோம்!
மாண்புமிகு பிரபாகரன் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், டிச.31-
           ஒற்றுமையே பலம் என்பதை மனதில் நிலை நிறுத்தி ஒரே சமுதாயமாக அனைவரும் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரபாகரன் தேசம் வலைத்தளத்திற்கு வழங்கிய  புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
        நமது இந்திய சமுதாயம் ஒற்றுமைமிக்க சமுதாயமாக இருக்க வேண்டும். எல்லா காலகட்டத்திலும் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் இருந்த ஒற்றுமையினால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆகையால், நமது இந்திய சமுதாயம் ஒற்றுமைமிக்க சமுதாயமாக இருக்க வேண்டும் என்று பிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
           இந்திய சமுதாயம் மலாய், சீனர், சீக்கியர், கடாசான், இபான் ஆகிய மக்களோடும் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். ஒரே சமுதாயமாக ஒற்றுமையோடு செயல்பட்டால் சிகரத்தையும் தொட்டு விடலாம் என்பதால் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மாண்புமிகு பிரபாகரன் மலேசியர்கள் அனைவருக்கும் தமது இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments