மித்ராவின் நிதி ஒதுக்கீடு விரைந்து கிடைக்கத்தால் சங்க நடவடிக்கைகளுக்கு பேருதவியாக இருக்கும்! -டத்தோ டாக்டர் அச்சயகுமார்

மித்ராவின் நிதி ஒதுக்கீடு விரைந்து கிடைக்கத்தால் சங்க நடவடிக்கைகளுக்கு பேருதவியாக இருக்கும்!
-டத்தோ  டாக்டர் அச்சயகுமார் 

செய்தி: 
குணாளன் மணியம்
படங்கள்: ஹரிஸ்ரீநிவாஸ்

ரவாங், டிச.28-
      மலேசிய தெலுங்கு சங்க நடவடிக்கைகளுக்கு முன்பு செடிக் என்று அழைக்கப்பட்ட மித்ராவின் நீதி ஒதுக்கீடு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அச்சயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கு சங்கத்தின் மொழி, மாணவர்களுக்கான நன்னெறி முகாம், தெலுங்கு கலை, கலாச்சாரம், பண்பாடு, தாய்மொழி விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆண்டுக்கு 16 லட்சம் வெள்ளி தேவைப்படுகிறது.
இதில் 60 விழுக்காடு செலவை தெலுங்கு சங்கம் ஏற்றுக் கொள்கிறது. மீதமுள்ள 40 விழுக்காடு மானியத்தை அரசாங்க வழங்கும் மானியங்கள் வழி ஈடுசெய்வதாகவும் தற்போது மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா (MITRA)  என்று பெயர் மாற்றம் கண்டுள்ள முந்தைய செடிக் நிதி ஒதுக்கீட்டை விரைந்து வழங்கும்படி  டத்தோ டாக்டர்  அச்சயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
          தெலுங்கு மாணவர்கள் மத்தியில் தெலுங்கு மொழி கல்வியை நிலைநிறுத்த கடந்த டிசம்பர் 8ஆம் நாள் தொடங்கிய தெலுங்கு மொழி, நன்னெறி முகாம் கடந்த  டிசம்பர் 24ஆம் நாள் முடிவடைந்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ அச்சயகுமார் அவ்வாறு தெரிவித்தார்.
           தெலுங்கு சங்கம் ஆளுங்கட்சிக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வருகிறது. அந்த வகையில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்திற்கு நாங்கள் ஆதரவு வழங்கி வருகிறோம். இந்த நாட்டில் சிறுபான்மை இனமாக இருக்கும் தெலுங்கு மக்களுக்கு தங்கள் மொழி, கலாச்சாரத்தை கட்டிக் காக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய நடவடிக்கைகளை நடத்தி வருவதாக அச்சயகுமார் சொன்னார்.

இந்நாட்டில் தாய் மொழி கற்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. நாங்கள் தமிழ் மொழி சார்ந்த பல நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறோம். அந்த அடிப்படையில்  தெலுங்கு மொழி நடவடிக்கைகளுக்கும் நிதியுதவி வழங்கி வருகிறோம் என்று இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்த தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ பி.சகாதேவன் கூறினார்.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. 
இந்த கல்வி  14ஆவது கல்வி முகாம் சொந்த கட்டடத்தில் நடைபெற்றது.  இதில் நாடு தழுவிய நிலையில் இருந்து 300 மாணவர்கள்  கொண்டனர்.
       
ரவாங், சுங்கை சோ அருகில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் புதிய, சொந்த கட்டடத்தில்  தெலுங்கு வகுப்புகள், மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள், தெலுங்கு சங்கத்தின் நடவடிக்கைகள் ஆகியவை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments