மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர் டான்ஸ்ரீ ரமேஷ், தமிழ் செய்தியாளர்களை கௌரவித்தார்

மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர் டான்ஸ்ரீ ரமேஷ், தமிழ்  செய்தியாளர்களை  கௌரவித்தார்!

மு.வ கலைமணி

பிறை, டிச.24-
        ஜாலான் பாரு அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக, இந்திய செய்தியாளர்களை கௌரவித்தல்,  வசதியற்ற மாணவர்களுக்கு பள்ளி உபகரண பொருட்கள் வழங்குதல் நிகழ்வை லைட் ஹோட்டல் நிறுவனம் சிறப்பாக நடத்தியது.

அதன் ஏற்பாட்டாளரும் தொழிலதிபருமான  டான்ஸ்ரீ டத்தோ ரமேஷ் வருகையாளர்கள் அனைவருக்கும் வாழை இலையில் அன்னம் பரிமாரி வருகையாளர்களின் அபிமானத்தை பெற்றார்.

சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும்  ஆசிரம குழந்தைகளுக்கு பள்ளி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாணவர்களோடு கலந்துக் கொண்ட பெற்றோர்களுக்கும் விருந்துபசரிப்புகள் வழங்கப்பட்டது.

பினாங்கு, கெடா மாநிலத்திலுள்ள தமிழ் பத்திரிகை செய்தியாளர்கள் மற்றும் ஆங்கில மலாய் பத்திரிக்கையில் பணிபுரியும் தமிழ்  செய்தியாளர்களுக்கும்  கௌரவிப்பு செய்யப்பட்டு மகிழ்விக்கப்பட்டது.

கௌரவிப்புகளை பெற்றுக் கொண்ட செய்தியாளர்கள், லைட் ஹோட்டல் நிறுவனம் நன்றி தெரிவித்த வேளையில், இத்தகைய ஒரு கௌரவிப்பு   லைட் ஹோட்டல் நிறுவனத்திற்கு மட்டுமே செய்து வருவதாகவும்  என்றும் தங்களின் போற்றுதலுக்கும்  நன்றியதலுக்குறியதாகும் என பெருமையுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் லைட் ஹோட்டல் நிறுவனத்தின் நிர்வாகிகள்,  முனிஸ்வரர் ஆலய தலைவர் மற்றும் நிர்வாகத்தினர்கள், பிரமுகர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

Comments