வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு செயல்படுவோம்! பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி புத்தாண்டு வாழ்த்து

வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு  செயல்படுவோம்! பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி புத்தாண்டு வாழ்த்து

புத்ராஜெயா, டிச.31-
      மலேசியர்கள் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு  செயல்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.


மலேசிய போன்ற பல்லின மக்கள் வாழும்  நாட்டில் இனப்பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். நாம் அனைவரும் இனம், மொழி வேற்றுமை பராமல் ஒற்றுமையோடு இருக்க  வேண்டும் என்று ஹிண்ட்ராப் தலைவருமான பி.வேதமூர்த்தி தெரிவித்தார்.

நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வை மனதில் விதைத்தால் கண்டிப்பாக இனபாகுபாடு காணாமல் போய்விடும். ஆகையால்.  நாம் இந்த இனம் என்ற வேற்றுமையை அகற்றி புத்தாண்டில் புதிய சிந்தனையை விதைப்போம் என்று கூறிய ஒற்றுமை துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி மலேசியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments