உலகப் பார்வையில் மிக பழமையான சீபீல்ட் தோட்ட மாரியம்மன் கோவிலும், அதன் பரபரப்பும்!

உலகப் பார்வையில் மிக பழமையான 
சீபீல்ட் தோட்ட மாரியம்மன் கோவிலும், அதன் பரபரப்பும்!

மு.வ.கலைமணி

பினாங்கு, டிச, 5.
          கோவில்களை பராமரித்திட
இந்து அறவாரிய அமைப்பு முறையா?
கோவில்களை வழிநடத்த அரசிடம்
பதிய வேண்டுமா?
இன்று இயக்கங்களுக்கான தேசிய பதிவிலாகாவில் பதியபெற்ற கோவில்களின் நிலைபாடுகள் என்னாவது?
ஐபிஎப் உத்தாமா தலைவர் மதியழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
          கடந்த 1966-இல் முற்றுகையிட்டு தொடர் போராட்டமாகவே இன்றுவரை
இருந்துவரும் தோட்ட பாட்டாளிகளின் வாழ்வாதார உரிமைகளில் ஒன்றான
தமிழர் வழிபாட்டுத் தலங்கள்,
நாடு சுதந்திரம் அடைந்து
வெள்ளையர்கள் வெளியேறிட
அன்று துண்டாடி  விற்கப்பட்ட
தோட்டங்களில் நூற்றுக் கணக்கில் அழிக்கப்பட்ட கோவில்கள் போக,
இன்று மீதப்பட்ட தோட்டங்களின் இருந்துவரும் கோவில்களின்
நிலைபாடுகள் நாளை தமிழர்களது சொத்துடமையாகுமா?
          147-ஆண்டு பதிவை உள்வாங்கிய
சிலாங்கூர் மாநில, சுபாங்,
சீபில்ட் தோட்ட மாரியம்மன் கோவில் விவகாரத்தில் எழுந்திட்ட புரட்சிக்கு
பின்னர்,
நாட்டின் ஆளும் அரசாங்கம்,
மிகப்பெரிய ஆர்வம் காட்டுவதை கணக்கிட்டால் நீண்ட நாளாக கண்டுக் கொண்டிருந்த கனவு.     "இந்து அறப்பணி வாரியம்" என்பதாகவே உள்ளது,
      கோவில்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் சட்டத்தை
அமல் செய்ய வேண்டி அவசரத்தில்
ஆளும்கட்சி தலைவர்களும்,
இந்திய அமைச்சர்களும் 100%
ஆர்வம் காட்டுவதை காணமுடிகிறது,
      இவை தேவைதானா?
இன்றைய கால முன்னேற்றத்திற்கு
இது சாத்தியமா?
கடந்தகால வரலாற்று பதிவில்
அரசாங்க தேவைகளுக்கு கோவில்களும் - இந்தியர் தலைவர்களும் வழிவிட்டதை யாரும் மறுத்திட முடியுமா?,
ஐந்து தோட்டங்களை அழித்து அமைக்கப் பெற்றதுவே இன்றைய புத்ராஜாயா,
அதன் உள்ளடக்கம்
ஐந்து கோவில்கள்-
ஐந்து தமிழ்ப்பள்ளிகள்-
ஐந்து இடுகாடுகள்-
ஆயிரக்கணக்கான தோட்டப் பாட்டாளிகளின் வேலைகள் இவற்றை விட்டுக் கொடுத்ததையும், அமைதிக் காத்ததையும், இன்றைய அரசாங்கமும், இந்திய அமைச்சர்களும் நினைவில் கொள்ள வேண்டும்,
நியாயமான நடைமுறைக்கு என்றுமே கோவில்கள் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை,
      இன்று அரசாங்கத்தால்
கட்டுமான சட்டம் தயாராகிறதாம். கோவில்கள் அனைத்தும் பதிவுபெற வேண்டுமாம், சொந்த நிலங்களை கொண்டிராத கோவில்கள் நிலைபாடு கட்டாய இடமாற்றத்தை செய்திட வேண்டுமாம்,
வீடமைப்பு ஊராட்சி அமைச்சர் மாண்புமிகு சுரைடா தகவல்,
மேலும் வழிபாடு தலங்கள் அமைப்பதற்கு அரசிடம் உரிமை பெற்றாக வேண்டும் என்பதெல்லாம் நூற்றாண்டு வரலாற்றுப் பதிவைகொண்ட கோவில்களுக்கு தகுமா?
         அரசாங்கத்தால்
சட்டமாக்கிட திட்டமிடும்  அறப்பணி வாரியம் இந்தியர்களின் கோவில் நிலைபாட்டில் நடுநிலையை கையாளுமா?
சீனர் சமூகத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில்,
கட்டுப்பாட்டை கொண்ட வசிப்பிடமாக வழங்கப்பட்ட ( கேம்கள்)
மலேசிய அரசாங்கத்தால் புதுகிராமங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டாகி
விட்டது,
இன்று அவற்றை அவர்களுக்கான
சொந்த நிலமாக மாற்றியமைக்கும் நடைமுறையிலும் அதில் அடங்கிய
சீன கோவில்களுக்கும் உரிமைகள் தரப்பட்டுள்ளதை,
கவனத்தில் கொண்டிடவும் வேண்டும் எனவும் மதியழகன் மேலும் விவரித்தார்.

Comments