போக்குவரத்து கழக மேலாளரின் பணிவான பேச்சுவார்த்தையில் பஸ் மறியல் கைவிடப்பட்டது!

போக்குவரத்து கழக மேலாளரின் பணிவான பேச்சுவார்த்தையில்  பஸ் மறியல் கைவிடப்பட்டது!

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

பொன்னமராவதி, டிச. 5-
        புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தொட்டியம்பட்டியில் நடைபெறவிருந்த பேருந்து மறியல் நிறுத்தப்பட்டது.
       பொன்னமராவதி போக்குவரத்து கழக மேலாளர் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டதால் திட்டமிடப்பட்டிருந்த பேருந்து மறியல் கை விடப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு மேலாக தொட்டியம்பட்டியில் பஸ் டாப் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த பஸ் டாப்பில் பேருந்துகள் நிற்காமல் செல்வதால் அப்பகுதி மாணவ மாணவிகள் பெரியவர்கள் என அனைவரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதனையடுத்து பேருந்து மறியல் செய்ய ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இளைஞர்கள் முடிவு செய்தனர் .
            இவ்வேளையில் பொன்னமராவதி தேசம் ஊடக வளைத்தள செய்தியாளர் இரா.பாஸ்கர் மற்றும் தொட்டியம்பட்டி ஊரார் சார்பில் அடைக்கப்பன், இளைஞர்கள் சார்பில் சாமிநாதன் ஆகியோர் சார்பில் பேருந்து பணிமனை மேலாளரிடம் பாஸ்கர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
கிளை மேலாளர் எங்களை மதித்து மறியலில் ஈடுபடாமல் தகவல் தெரிவித்தற்கு நன்றி தெரிவித்து தொட்டியம்பட்டியில் பேருந்துகள் நின்று செல்லும் என்று உறுதியளித்தார்.
இதனையடுத்து தொட்டியம்பட்டி ஊர் மக்கள் சார்பிலும், பொன்னமராவதி தேசம்  வலைத்தள செய்தியாளர் சார்பிலும் கிளை மேலாளர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Comments