மலேசியாவைச் சேர்ந்த தர்ஷினி கஜா புயல் நிவாரண நிதி வழங்கினார்!

மலேசியாவைச் சேர்ந்த தர்ஷினி  கஜா புயல் நிவாரண நிதி வழங்கினார்!

இரா.பாஸ்கர் பொன்னமராவதி தேசம் செய்தியாளர்

பொன்னமராவதி, டிச.5
       மலேசிய நாட்டில் முகநூல் வழி நட்புறவாக இருந்து பொன்னமராவதி மக்களுக்கு சொந்தங்களாக கிடைத்த தங்கை தர்ஷினி தானாக முன்வந்து கஜா புயல் நிவாரண நிதிக்கு நூறு வெள்ளி வழங்கினார்.  இதனையடுத்து மக்கள் நண்பன் மக்கள் ஓசை நிருபர் டாக்டர் எம். அன்பா வெள்ளி நிதி வழங்கினார்.
             இந்த நிதியில்  மெழுகுவர்த்தி, கொசு பத்திகள், தண்ணீர் பாக்கெட்கள் வாங்க முடிவெடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்வேளையில் தானாக முன்வந்து மலேசியாவில் இருந்து 100 வெள்ளியை நன்கொடையாக வழங்கிய மலேசிய தங்கை தர்ஷினிக்கும் அன்பாவுக்கும் பொன்னமராவதி மக்கள் சார்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி மக்கள் சார்பிலும் பொன்னமராவதி தேசம்  வலைத்தள செய்தியாளர் சார்பிலும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments