ஆலயங்களுக்கு அரணாக இருப்போம்! மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் புத்தாண்டு வாழ்த்து

ஆலயங்களுக்கு அரணாக இருப்போம்!
மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், டிச.31- 
          இந்துக்கள் ஆலய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் வழங்கி ஆலயங்களுக்கு அரணாக இருக்க வேண்டும் என்று மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்.
         மலேசியாவில் இந்தியர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவின் பல இன, மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இப்போதைய மலேசியாவில் புலம்பெயர்ந்தனர். இதில் தமிழர்கள் அதிகமாக இங்கு வந்தனர். மத சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள இந்நாட்டில் இந்து மதத்தை நிலைபெறச் செய்தனர்.

தாய்மொழியால் வேறுபட்டிருந்தாலும் இந்து என்ற அடிப்படையில் இந்நாட்டில் குறிப்பாக தோட்டப்புறங்களில் ஆலயங்கள் அமைந்து வழிபட்டு வந்தனர்.
அந்த மரபு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இக்காலத்து மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஆலயத்திற்கு சென்று வழிபடும் நடைமுறை குறைந்து விட்டது. இந்நாட்டில் ஆலயங்களை நிலைபெறச் செய்வதற்கு இந்துக்கள் ஆலய வழிபாட்டிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.

நாம் ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டால்தான் அது அங்கு நிலைபெறும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. ஆலயம் இல்லாத ஊரில் குடியிருக்காதே என்று அன்றே சொல்லி வைத்து விட்டார்கள். அதேநேரத்தில் இருக்கும் ஆலயத்திற்கு செல்லாவிட்டால் அது கைவிடப்படும் நிலைக்கு ஆளாகி பிறகு அதனை அகற்றும் சூழ்நிலையும் உருவாகும் என்பதால் இந்துக்கள்  அரணாக ஆலய வழிபாட்டிற்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார் அம்மா ரத்னவள்ளி.
         
இந்த நாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக  இருந்து ஆலய வழிபாட்டிற்கு சென்று வழிபட்டு ஒரு மகிழ்ச்சியான புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.  இந்த தீபாவளி நாளில் இதனையே நாம் அனைவரும் லட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ரத்னவள்ளி அம்மையார், மலேசியா வாழ் இந்துக்கள் அனைவருக்கும் தமது புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Comments