இந்திய இளைஞர்கள் இமயத்தையும் தொட எழுச்சிமிக்க சிந்தனையை விதைப்போம்! டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் புத்தாண்டு வாழ்த்து

இந்திய இளைஞர்கள் இமயத்தையும் தொட  எழுச்சிமிக்க சிந்தனையை விதைப்போம்!
டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் புத்தாண்டு வாழ்த்து

கோலாலம்பூர், டிச.31-
          இந்திய இளைஞர்கள் இமயத்தைத் தொட  அனைவரும் ஒற்றுமையாய் எழுச்சிமிக்க, புத்தாக்க சிந்தனையை விதைப்போம் என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ விக்னேஷ்வரன் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.   
            இந்திய இளைஞர்கள்்மத்தியில்  ஆற்றல் நிறைந்து இருக்கிறது. அந்த ஆற்றலை நாம்தான் வெளிக் கொண்டு வரவேண்டும். ஆற்றல் கொண்ட இளைஞர்கள்  இமயத்தையும் தொட முடியும். ஒரு  சமுதாயத்தையும் வழி நடத்த முடியும் என்பதால் புத்தாண்டில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க அனைவரும் ஒற்றுமையாய் பாடுபட வேண்டும் என்று  நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான
டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
         நான் இளைஞராக இருந்த காலத்தில் வாய்ப்புகள் அதிகம் இல்லை. சொந்த முயற்சியில் வாய்ப்புகளைத் தேடி வெற்றி கண்டேன். ஆனால், தற்போதைய சூழல் அப்படி இல்லை. இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை நன்கு பயன்படுத்தி எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ள வேண்டும். இம்முயற்சிக்கு ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் கைகோர்க்க வேண்டும் என்று எஸ்.ஏ.விக்னேஷ்வரன் சொன்னார்.
         அரசியல், அமைப்பு, இயக்கம் என்று இளைஞர்கள் பல நிலைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் எண்ணம் எப்போதும் முன்னேறத் துடிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். இளைஞர்கள் இலக்கை முன்வைத்து செயல்பட வேண்டும். ஆற்றல் மிகுந்த இளைஞர்கள் கண்டிப்பாக இமயத்தை தொட முடியும். ஆகையால், இந்தப் புத்தாண்டில் ஒட்டு மொத்த இந்திய சமுதாயமும் ஒற்றுமையாய் இருந்து இந்திய  இளைஞர்கள் நலனுக்கு பாடுபடுவோம் என்று குறிப்பிட்ட டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஷ்வரன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை  தெரிவித்துக் கொண்டார்.

Comments