இளைஞர்களின் வாழ்க்கையை ஐயப்பன் சுவாமி விரதம் நெறிப்படுத்துகிறது! பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பெருமிதம்

இளைஞர்களின் வாழ்க்கையை ஐயப்பன் சுவாமி விரதம் நெறிப்படுத்துகிறது! பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பெருமிதம்

குணாளன் மணியம்

கோலாலம்பூர், டிச.2- 
           இந்திய இந்து இளைஞர்களின் வாழ்க்கை முறையை ஐயப்பன் சுவாமி விரதம் நெறிப்படுத்துவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் கூறினார்.

            சபரிமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் மாலை போட்டு 41 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனுக்கு பூசை செய்கிறார்கள்.

ADVERTISEMENT- விளம்பரம்


ADVERTISEMENT- விளம்பரம்


இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிகம் பேசுவதில்லை. தங்கள் வாழ்க்கையை நெறிமுறைகளோடு நடத்த பக்குவப்படுவதாக மலேசிய ஐயப்பன் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் செந்தூல் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் நடந்த சிறப்பு ஐயப்பன் பூசையில் பக்தர்கள் மத்தியில் உரையாற்றுகையில் பிரபாகரன் அவ்வாறு சொன்னார்.

       இந்து இளைஞர்கள் எல்லா காலகட்டத்திலும் நெறிமுறைகளோடு இருந்தால் வாழ்க்கை சிறக்கும்.

ஐயப்பன் பக்தர்கள் குறிப்பாக இளைஞர்கள்  நெறிமுறைகளோடு வாழ்க்கை வாழ்வதற்கு இந்த விரதம் முக்கியப் பங்காற்றும் என்று பிரபாகரன் தமதுரையில் சொன்னார்.
          செந்தூல் ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு பூசையில் கலந்து கொண்ட  பிரபாகரன் பக்தர்களோடு அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments